யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
மற்றவர்களின் இயலாமையை தவறாக பயன்படுத்தி சில தவறான வதந்திகளை பதிவிடுகின்றனர் . படத்தில் உள்ள மாணவிகள் ஹைதரபாத்தில் மலகபெட் ஊரில் உள்ள GHS பார்வையற்ற மாணவியர் பள்ளியை சேர்ந்தவர்கள் . தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளிக்கு நன்கொடை வழங்கி சேவை செய்த போது எடுக்கப்பட்ட படம்தான் இது . இதை பார்வையற்ற...
பரவிய செய்தி
பார்வையற்ற தமிழக மாணவிகள் டென்மார்க் நாடு வரை சென்று ஓவியம் வரைந்து சாதனை படைத்து உள்ளனர் .
விரிவான விளக்கம்
மற்றவர்களின் இயலாமையை தவறாக பயன்படுத்தி சில தவறான வதந்திகளை பதிவிடுகின்றனர் . படத்தில் உள்ள மாணவிகள் ஹைதரபாத்தில் மலகபெட் ஊரில் உள்ள GHS பார்வையற்ற மாணவியர் பள்ளியை சேர்ந்தவர்கள் .
தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று பள்ளிக்கு நன்கொடை வழங்கி சேவை செய்த போது எடுக்கப்பட்ட படம்தான் இது . இதை பார்வையற்ற தமிழக மாணவிகள் என்று கூறி தவறான பதிவுகளை வலைதளங்களில் பரப்பியுள்ளனர் .
வலைதளங்களில் தற்பெருமைக்காவும் , விளம்பரத்திற்காகவும் இத்தகைய செயலை செய்துள்ளனர் . தமிழக மாணவிகள் என்றும் , குறிப்பாக பார்வையற்றவர்கள் என்று கூறினால் தானே பதிவு அதிகமாக பேசப்படும் என்ற நோக்கத்தில் இவ்வாறு செய்துள்ளனர் .
பார்வையற்றவர்களை வைத்து எப்படித்தான் இம்மாதிரியான தவறான செய்தியை பரப்ப மனம் வருகிறது என்று தெரியவில்லை .
இவ்வாறு தவறான பதிவுகள் மூலமான விளம்பரங்கள் நம் தமிழ் சமூகத்திற்கு தேவை இல்லை . நமது மாணாக்கர்களும் , இளைஞர்களும் தங்கள் திறமையால் உலகம் முழுவதும் பாராட்டக்கூடிய செயல்களை செய்து வருகின்றன . எனவே தவறான பதிவுக்கு பதிலாக நம் மக்களின் திறமைகளை வெளிக்கொணர உதவுங்கள் .

சுருக்கமாக
தமிழக மாணவிகள் அல்ல ஹைதராபாத் பார்வையற்ற பள்ளியை சேர்ந்த மாணவிகள் ..