யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
கோட்சேவுக்கு ஆதரவாக பேசிய பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன், சென்னை மாநகராட்சி 134வது வார்டில் வெறும் 8 ஓட்டுகள் மட்டுமே வாங்கி டெபாசிட் இழந்து படுதோல்வி !

விரிவான விளக்கம்
சென்னை மாநகராட்சியின் 134-வது வார்டில் பாஜக சார்பில் உமா ஆனந்தன் போட்டியிடுவதாக தகவல் வெளியான பிறகு, " நான் கோட்சே ஆதரவாளர் " என சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசிய பல வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.
மேலும் படிக்க : “நான் கோட்சே ஆதரவாளர்” எனப் பேசிய உமா ஆனந்தனுக்கு பாஜகவில் சீட்டு.. வைரலாகும் அவரின் வீடியோக்கள் !
இன்று காலை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது 134-வது வார்டில் உமா ஆனந்தன் 8 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததாக பத்திரிக்கையாளர்கள் மற்றும் அரசியல் கட்சி ஆதரவாளர்கள் தரப்பில் பகிரப்பட்டு வைரலாகி வந்தது.

திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜாவும் தன் ட்விட்டர் பக்கத்தில், உமா ஆனந்தன் 8 வாக்குகள் வாங்கி தோல்வி அடைந்ததாக விமர்சித்து பதிவிட்டு இருந்தார்.
உண்மை என்ன ?
சென்னை 134வது வார்டில் உமா ஆனந்தன் 8 வாக்குகளை மட்டுமே பெற்றதாக பரவும் செய்திகள் தவறானது, அவர் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து இறுதியில் வெற்றியும் பெற்றுள்ளார்.

" சென்னை 134வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட உமா ஆனந்தன் 5,635 வாக்குகளும், காங்கிரஸ் 3503 வாக்குகளையும், அதிமுக 2655 வாக்குகளையும் பெற்றுள்ளன. உமா ஆனந்தன் வெற்றி பெற்றுள்ளார் " என தமிழக பாஜகவின் செய்தித்தொடர்பாளர் சூர்யா ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.
Twitter link
தவறானத் தகவலைப் பகிர்ந்த பத்திரிக்கையாளர் நிரஞ்சன் குமார், உமா ஆனந்தன் வெற்றிப் பெற்றுள்ளார் என்கிற தகவலையும் ட்விட்டரில் பின்னர் பதிவிட்டு இருக்கிறார்.
Twitter link
முடிவு :
நம் தேடலில், சென்னை மாநகராட்சி 134வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் உமா ஆனந்தன் வெறும் 8 ஓட்டுகள் மட்டுமே வாங்கி டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்ததாக பரவும் தகவல் தவறானது. அவர் வெற்றிப் பெற்றுள்ளார் என அறிய முடிகிறது.

Giant Killer #UmaAnandan in Ward - 134 Chennai Corporation.
BJP - 5635 Votes
Congress + DMK + 10 Parties - 3503 Votes
ADMK - 2655 Votes#TamilNadu | #LocalBodyElections2022 | #BJP | #Chennai pic.twitter.com/lthL0CIRMr
— SG Suryah (@SuryahSG) February 22, 2022
Twitter link
தவறானத் தகவலைப் பகிர்ந்த பத்திரிக்கையாளர் நிரஞ்சன் குமார், உமா ஆனந்தன் வெற்றிப் பெற்றுள்ளார் என்கிற தகவலையும் ட்விட்டரில் பின்னர் பதிவிட்டு இருக்கிறார்.
சென்னை 134 வது வார்ட்டில் பாஜக சார்பில் உமா ஆனந்தன் என்பவர் வெற்றி... https://t.co/67q6K52WbK pic.twitter.com/sL4t7QSlP4
— Niranjan kumar (@niranjan2428) February 22, 2022