YouTurn

ராமர் கோவில் கட்ட பணம் தராததால் பாஜகவினர் கடையை சூறையாடும் வீடியோவா ?

ராமர் கோவில் கட்ட பணம் தராததால் பாஜகவினர் கடையை சூறையாடும் வீடியோவா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ராமர் கோவில் கட்டுவதற்கு பணம் தராததால் கடையை சூறையாடும் பாஜகவினர்.



Facebook link

விரிவான விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பணம் கேட்டு தராததால் பாஜகவினர் கடைகளை சூறையாடியதாக, இனிப்பு கடையில் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் லட்டுகளை எடுத்து சிலர் சாலையில் வீசும் 30 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.





சில தினங்களுக்கு முன்பாக " ராமர் கோவில் கட்ட துட்டு குடுங்கடான்னா, ஸ்வீட்டை குடுக்குறானுங்க சார் ராஸ்கல்ஸ். ராமருக்கு சுகர் வந்துராது ? " எனும் நிலைத்தககவல் உடன் இந்த வீடியோவை பரப்பத் துவங்கினர். ஆகையால், வைரல் செய்யப்படும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து அறிய தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?  



அயோத்தியில் லட்டு கடை சூறையாடப்பட்டது குறித்து தேடுகையில், உத்தரப் பிரதேசம் அயோத்தியாவில் உள்ள ஹனுமன் கார்ஹி கோவில் பகுதியில் அர்ச்சகர்கள் கோபத்துடன் லட்டுகளை சாலையில் வீசியதாக ஜூலை 1-ம் தேதி தி லாஜிக்கல் இந்தியன் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.



" அயோத்தியில் உள்ள ஹனுமன் கார்ஹி கோவில் பகுதியில் பிரசாதம் வழங்குவதை கொரோனா காரணமாக அயோத்தி மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. கோவில் வெளியே உள்ள கடையில் பழைய லட்டுகளை வழங்குவதை அர்ச்சகர்கள் எதிர்த்து வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அர்ச்சகர்கள், சாதுக்கள் குழுவினர் கடையில் இருந்த லட்டுகளை சாலையில் வீசத் துவங்கி இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது.

லட்டுகளை சாலையில் வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அங்குள்ள வர்த்தகர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடைகளை மூடி உள்ளனர். சாலையில் இறங்கி போராட்டத்திலும் ஈடுபடத் துவங்கியதாக " ஜீநியூஸ் உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.



முடிவு :

நம் தேடலில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பணம் கேட்டு தராததால் கடையை சூறையாடிய பாஜகவினர் என பரப்பப்படும் வீடியோ தவறானது. அயோத்தியாவில் உள்ள ஹனுமான் கார்ஹி கோவில் பகுதியில் உள்ள கடைகளில் பழைய லட்டுகளை பக்தர்களுக்கு வழங்குவதாக குற்றம்சாட்டி அர்ச்சகர்கள் மற்றும் சிலர் சேர்ந்து லட்டுகளை சாலையில் வீசி இருக்கிறார்கள் எனத் தெளிவாய் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க