YouTurn

ஆடு, கோழி பலியிட தடை, வட மாநிலத்தவருக்கு 50% இடஒதுக்கீடு என பாஜக அறிவித்ததாக வதந்தி !

ஆடு, கோழி பலியிட தடை, வட மாநிலத்தவருக்கு 50% இடஒதுக்கீடு என பாஜக அறிவித்ததாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கோவில்களின் புனிதத்தன்மை பாதுகாக்கப்படும். கோவில்களில் ஆடு, கோழி பலியிடுவது தடை செய்யப்படும்.



தேசிய ஒற்றுமையை வளர்க்க தமிழ்நாட்டு அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் வட மாநிலத்தவர்க்கு 50% இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

விரிவான விளக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையும், தொலைநோக்கு பத்திரம் எனும் வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக சொல்லாத சில வாக்குறுதிகளை கூறியது போன்று ஃபோட்டோஷாப் செய்து சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகிறார்கள்.



Twitter link | Archive link 

சில பதிவுகள் ட்ரோல் செய்வதற்கு ஃபோட்டோஷாப் செய்து பரப்பப்பட்டு வந்தாலும், அரசியல் கட்சி சார்ந்தவர்களாலும் ட்ரோல் செய்யப்பட்ட பதிவுகளும் வெளியாகி வருகின்றன. இதுபோன்ற பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் வாசகர்களின் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது .

கோவில்களில் ஆடு, கோழி பலியிட தடை, தமிழக வேலைவாய்ப்பில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50% இடஒதுக்கீடு என எந்த அறிவிப்பையும் தமிழக பாஜக வெளியிடவில்லை.



Twitter link | Archive link 

" இன்று மாலை தமிழக பாஜகவின் "தேர்தல் அறிக்கை" வெளியிடப்பட உள்ளது " என வெளியிடப்பட்ட ஆன்லைன் போஸ்டர் புகைப்படத்தில் மாற்றி மாற்றி போட்டோஷாப் செய்து வதந்தியையும், கிண்டலும் செய்து வருகிறார்கள்.

பாஜக தொலைநோக்கு பத்திரத்தில், " வெளி மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் வந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தேவையான குடியிருப்பு வசதிகள் செய்து தரப்படும் " என அறிவித்து இருந்தது. இதன் காரணமாக, வெளிமாநிலத்தவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவதாக கூறியது போன்று ஃபோட்டோஷாப் செய்து பரப்புகின்றனர்.

மேலும் படிக்க : தமிழ்நாட்டின் பெயரை “தக்ஷிண பிரதேஷ்” என்று மாற்றுவோம் என பாஜக அறிவித்ததா ?

இதற்கு முன்பாக, தமிழ்நாட்டின் பெயரை "தக்ஷிண பிரதேஷ் " என்று மாற்றுவோம் என பாஜக அறிவித்ததாக ஃபோட்டோஷாப் செய்த புகைப்படத்தை வைரல் செய்தனர்.

முடிவு : 

நம் தேடலில், கோவில்களில் ஆடு, கோழி பலியிட தடை, தமிழக வேலைவாய்ப்பில் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு 50% இடஒதுக்கீடு என பாஜக அறிவித்ததாக பரப்பப்படும் புகைப்படங்கள் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டவை என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க