YouTurn

உலகிலேயே அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடு இந்தியாவா ?

உலகிலேயே அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடு இந்தியாவா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மொத்த தடுப்பூசி அளவுகளில் இந்தியா மற்றொரு மைல் கல்லை அடைகிறது .. உலகிலேயே அதிக அளவாக இந்தியா, பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான அரசு 32.36 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது.



Twitter Archive link 

விரிவான விளக்கம்

கொரோனாவிற்கு எதிராக செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசி அளவுகளில் இந்தியா மற்றொரு மைல் கல்லை அடைகிறது, உலகிலேயே அதிக அளவாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 32.36 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது என தமிழக பாஜக வரைபடத்துடன் கூடிய பதிவை ட்விட்டரில் பதிவிட்டது.





இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, யு.கே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கையை காண்பித்து பகிர்ந்த பதிவு பாஜக கட்சியினர் மற்றும் ஆதரவாளர்களால் அதிகம் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை என்ன  ?

தமிழக பாஜக பகிர்ந்த தகவலில், இந்தியா 32.36 கோடி, அமெரிக்கா 32.33 கோடி, யு.கே 7.63 கோடி, ஜெர்மனி 7.14 கோடி, பிரான்ஸ் 5.24 கோடி, இத்தாலி 4.9 கோடி எனக் கூறப்பட்டுள்ளது. ஜூலை 1 நிலவரப்படி,  mygov.in/covid-19 இணையத்தில் இந்தியாவில் மொத்தம் 33 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.



இந்தியா 33 கோடிக்கும் அதிகமான தடுப்பூசியை செலுத்தி அமெரிக்காவிற்கு(சிறிது இடைவெளி) முன்பாக இருப்பதாக இருந்தாலும், அந்தந்த நாடுகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப செலுத்தப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்ட எண்ணிக்கையுடன் ஒப்பிட்ட வேண்டியது அவசியம்.

கூகுள் நியூஸ் தளத்தில், ஒவ்வொரு நாடுகளிலும் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகள், ஒருநாளைக்கு செலுத்தப்படும் தடுப்பூசி எண்ணிக்கை, 2 தடுப்பூசியும் செலுத்திக் கொண்ட மக்களின் எண்ணிக்கை, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் சதவீதம் உள்ளிட்டவை வெளியாகி இருக்கிறது.



உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. நாடுகள் அடிப்படையில் பார்க்கையில், " சீனாவில் 122 கோடி தடுப்பூசி அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இரு டோஸ்களும் செலுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 32.74 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாகவும், 5.7 கோடி மக்களுக்கு மட்டுமே இரு டோஸ்களும் செலுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 15 கோடி பேருக்கு இரு டோஸ்களும் செலுத்தப்பட்டு 46.8% மக்கள் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். ஜெர்மனி மற்றும் யு.கே உள்ளிட்ட நாடுகளின் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசி செலுத்தியதை இந்தியாவுடன் ஒப்பிடுவது தவறாகும்.



edition.cnn இணையதளத்திலும், சீனா 122 கோடி தடுப்பூசி செலுத்தி முதலிடத்தில் இருப்பதாகவே இடம்பெற்று இருக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் அதிக அளவாக இந்தியா இருப்பதாக பதிவிட்ட தமிழக பாஜக சீனாவை பட்டியலில் சேர்க்கவில்லை. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாடுகளின் மக்கள் தொகை மற்றும் இரு டோஸ்களும் செலுத்தியவர்கள் அடிப்படையில் பார்த்தால் இந்தியா அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்பதே உண்மை.

முடிவு :

நம் தேடலில், இந்தியாவில் 32.36 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தியதை உலகிலேயே அதிக அளவாக உள்ளதாக தமிழக பாஜக பகிர்ந்த தகவல் தவறானது. இந்தியாவை விட அதிக அளவில் கொரோனா தடுப்பூசிகளை சீனா செலுத்தி இருக்கிறது. வரைபடத்தில் சீனாவை ஒதுக்கி விட்டு இந்தியாவை விட மக்கள் தொகை குறைவாக உள்ள நாடுகளுடன் ஒப்பிட்டு இருக்கிறார்கள் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க