YouTurn

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற விஜய் திருநீறு பூசிக்கொள்ளவில்லையா?

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற விஜய் திருநீறு பூசிக்கொள்ளவில்லையா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

திருச்செந்தூர் கோவிலிருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வரும்போது விஜய் திருநீறு பூசியிருப்பதைக் காணமுடிகிறது.

பரவிய செய்தி

ஒருத்தர் நெற்றியிலும் சிறு கீற்று விபூதி கூட இல்லை...

முருகன் கோயிலில் திருநீறு பூசாமலே சாமி கும்பிடலாம்னு காட்டுவதும் புரட்சி தான் போல… 

நடத்துங்கடா… 



X Link / Archive Link


விரிவான விளக்கம்

கடந்த ஏப்ரல் 28ஆம் தேதியன்று  தவெக தலைவர் விஜய், திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்றார். அப்போது அவர் கையில் வேலுடன் நடந்து வரும் புகைப்படத்தை பதிவிட்டு, ’முருகன் கோவிலுக்கு  சென்று தரிசனம் செய்தாலும்  விஜய் திருநீறு கூட பூசிக்கொள்ளவில்லை’ என்று சரவணபிரசாத் பாலசுப்ரமணியன் என்ற பாஜக ஆதரவாளர் சமூக வலைத்தளத்தில் பரப்பி வருகிறார்.



உண்மை என்ன?


தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் சென்றது குறித்த செய்திகளை பார்த்தோம். அப்போது ’News தமிழ்’ செய்தி ஊடகத்தின் ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது. 



திருச்செந்தூரில் தரிசனம் முடித்துவிட்டு, விஜய் சென்னை திரும்புவதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்ததாக ’News தமிழ்’ வெளியிட்டுள்ள செய்தி வீடியோவில், விஜய் விமான நிலையத்திற்குள் நுழையும் போது அவரது நெற்றியில் திருநீறு இருப்பதைக் காணமுடிகிறது.  



ஆனால் ‘I Tamil News’ சேனல் வெளியிட்டுள்ள வீடியோவில், திருச்செந்தூர் கோவிலில் விஜய்-க்கு வேல் கொடுக்கப்படும் போதும், அவர் அங்கிருந்து காரில் புறப்படும் போதும் அவரது நெற்றியில் திருநீறு இல்லை என்பதையும் பார்க்க முடிகிறது. 


image.png


அதேநேரத்தில், விஜய் நெற்றியில் திருநீறு இல்லாமல் கையில் வேலுடன் இருக்கும் புகைப்படம் போலியானதும் அல்ல. அந்த புகைப்படத்தைக் கொண்டு ‘India Today’ செய்தி வெளியிட்டிருப்பதையும் காணமுடிகிறது. 


மேற்கூறிய விவரங்களிலிருந்து, விஜய் தூத்துக்குடி விமான நிலையத்தில் திருநீறு பூசியிருப்பதைக் காணமுடிகிறது. ஆனால் அவர் திருநீறு இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை மட்டும் பதிவிட்டு, கிறிஸ்த்துவரான விஜய் கோவிலுக்கு சென்று திருநீறு பூசாமல் இருக்கிறார் என்று சரவணபிரசாத் பாலசுப்ரமணியன் என்ற பாஜக ஆதரவாளர் மதவாத கண்ணோட்டத்தில் திரித்து பரப்புகிறார். 


முடிவு:


திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனம் செய்த விஜய் திருநீறு பூசிக்கொள்ளவில்லை என்று தவறாக பரப்புகிறார் பாஜக ஆதரவாளரான சரவணபிரசாத் பாலசுப்ரமணியன்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க