யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
“முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த பிரமாண்ட பேரணியில் ஒருவர் கையில் கூட தேசியக்கொடி இல்லை. தேசியக்கொடி என்ன தீண்டத்தகாதப் பொருளா” என்று குறிப்பிட்டு பாஜக மகளிரணி நிர்வாகி சுமதி மேகவர்ணம் பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த பிரமாண்ட பேரணியில் ஒருவர் கையில் கூட தேசியக்கொடி இல்லை - பாஜக மகளிரணி நிர்வாகி சுமதி மேகவர்ணம்.
விரிவான விளக்கம்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான போர் சூழலில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி சமீபத்தில் சென்னை கடற்கரைச் சாலையில் நடைபெற்றது. இந்த பேரணியில் ராணுவ முன்னாள், இந்நாள் அதிகாரிகள், மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் திரளாக பங்கேற்றனர்.
இந்நிலையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த பிரமாண்ட பேரணியில் ஒருவர் கையில் கூட தேசியக்கொடி இல்லை. தேசியக்கொடி என்ன தீண்டத்தகாதப் பொருளா” என்று குறிப்பிட்டு பாஜக மகளிரணி நிர்வாகி சுமதி மேகவர்ணம் பேசியுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியின் புகைப்படங்களை காண முடிந்தது.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பக்கத்தில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு ஒற்றுமையுடன் பேரணியை அணிவகுத்தது“ என்று குறிப்பிட்டு புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்த புகைப்படங்களில், பேரணியில் பெரும்பாலனவர்களின் கைகளில் தேசியக்கொடி இருப்பதை தெளிவாகக் காணமுடிகிறது.
#IndianArmedForces.
The ceasefire is a welcome step — may peace endure. Our heartfelt salute to the courage of those who guard our borders.@adgpi @HQ_IDS_India @DefenceMinIndia pic.twitter.com/T6YoIiNmwO
இதன் மூலம் , “முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த பிரமாண்ட பேரணியில் ஒருவர் கையில் கூட தேசியக்கொடி இல்லை. தேசியக்கொடி என்ன தீண்டத்தகாதப் பொருளா” என்று குறிப்பிட்டு பாஜக மகளிரணி நிர்வாகி சுமதி மேகவர்ணம் பேசியுள்ள செய்திகள் முற்றிலும் தவறானவை என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த பிரமாண்ட பேரணியில் ஒருவர் கையில் கூட தேசியக்கொடி இல்லை என்று பாஜக மகளிரணி நிர்வாகி சுமதி மேகவர்ணம் பேசியுள்ள செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது.