YouTurn

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக பரப்பப்படும் 3 ஆண்டுகள் பழைய செய்தி !

பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பதாக பரப்பப்படும் 3 ஆண்டுகள் பழைய செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பாஜக ஆளும் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு ஆனால் தமிழ்நாட்டில் குறைப்பு இல்லை விடியல்.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100ரூபாயை கடந்து விற்பனை செய்யப்பட்டு வருவதால் பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் ஆட்சியாளர்கள் பொதுமக்களின் கண்டனங்களை பெற்று வருகிறார்கள். ஊடகங்கள், சமூக வலைதளங்களில் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் தொடர்பான பதிவுகளே பிரதானமாக உள்ளது.

இந்நிலையில், " பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு. ஆனால், பாஜக ஆட்சியில் இல்லாத தமிழகம் உள்பட மற்ற மாநிலங்களில் விலை குறைப்பு இல்லை " என பாலிமர் சேனலில் வெளியான 40 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.



 



வைரல் செய்யப்படும் வீடியோவில், பாஜக மாநில அரசுகளை பின்பற்றி பீகார் அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் சேர்ந்து பெட்ரோல், டீசல் விலையில் 2.50ரூபாய் விலை குறைப்பு செய்ததை தொடர்ந்து அனைத்து பாஜக ஆளும் மாநிலங்களும் 2 ரூபாய் முதல் 2.50 ரூபாய் வரை குறைக்க ஒப்புதல் அளித்து உள்ளன. இதனால் 14 மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை 5ரூபாய் வரை குறைத்துள்ளது. ஆனால், பாஜக அல்லாத மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூடுதல் வரியை குறைக்க மறுத்து விட்டன. இந்நிலையில் பீகார் அரசும் 2.50 ரூபாய் வாட் வரியை குறைத்துள்ளதால் அம்மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளது " எனக் கூறப்பட்டுள்ளது.

உண்மை என்ன ? 



பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் 2.50 ரூபாய் வரை விலை குறைப்பு குறித்து தேடுகையில், " பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைகிறது " எனும் தலைப்பில் 2018 அக்டோபர் மாதம் தமிழ் செய்திகள் பலவற்றில் விலை குறைப்பு தொடர்பான செய்தி வெளியாகி இருக்கிறது.



இதுகுறித்து பாலிமர் சேனல் செய்தி வெளியிட்டதா எனத் தேடுகையில், 2018 அக்டோபர் 6-ம் தேதி பாலிமர் சேனலில் " மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று பெட்ரோல்,டீசல் மீதான வரி குறைப்பு " எனும் தலைப்பில் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவே தற்போது பரப்பப்பட்டு வருகிறது. 

மேலும் படிக்க : ஒன்றிய அரசானது வரிகளுடன் பெட்ரோலை ரூ.52க்கு தருவதாக பாலிமர் வெளியிட்ட தவறான செய்தி ! 

கடந்த சில நாட்களாக, இந்திய ஒன்றிய அரசு ரூ.52க்கும், ரூ.59க்கும் தரும் ஒரு லிட்டர் பெட்ரோலை தமிழ்நாடு அரசு 40ரூபாய் வரி வைத்து விற்பனை செய்வதாக தொடர்ந்து வதந்தியை பரப்பி வருகின்றனர். பாலிமர் செய்தியும் அந்த தவறான செய்தியை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியது. தற்போது பாலிமர் சேனலின் பழைய வீடியோவை வைத்து தவறான தகவலைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

2021 ஜூலை 5-ம் தேதி நிலவரப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பெட்ரோல் விலை குறித்து எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது. மத்தியப் பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் கூட பெட்ரோல் விலை 100ரூபாயைக் கடந்து செல்வதை பார்க்கலாம்.



முடிவு :

நம் தேடலில், பாஜக ஆளும் மாநிலத்தில் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு ஆனால் தமிழ்நாட்டில் குறைப்பு இல்லை என பரவும் தகவலும், பாலிமர் செய்தியின் வீடியோவும் 3 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய செய்தி என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க