YouTurn

பாஜகவும் RSS-ம் விடுதலை சிறுத்தைகளின் நண்பர்கள் என திருமாவளவன் பேசியதாகப் பரப்பப்படும் வதந்தி

பாஜகவும் RSS-ம் விடுதலை சிறுத்தைகளின் நண்பர்கள் என திருமாவளவன் பேசியதாகப் பரப்பப்படும் வதந்தி

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

“பாரதிய ஜனதாவும், ஆர்எஸ்எஸ்-ம் விடுதலை சிறுத்தைகளின் நண்பர்களாகத்தான் இருப்பார்கள். அதிலே எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. என் தாய் இந்து தான், நான் பல மேடைகளில் சொல்லி இருக்கிறேன்” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும் வீடியோ டிவிட்டரில் பகிரப்பட்டு வருகிறது. 



Twitter link 

விரிவான விளக்கம்

சவுக்கு ஷங்கர் (savukku_online) என்ற டிவிட்டர் கணக்கிலிருந்து செப்டம்பர் 5, 2022 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசும் 15 வினாடிகள் வீடியோ ஒன்றினை பதிவிடப்பட்டுள்ளது.

அப்பதிவில் விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு டாக் செய்யப்பட்டுள்ளார். அதில், " பாரதிய ஜனதாவும், ஆர்எஸ்எஸ்-ம் விடுதலை சிறுத்தைகளின் நண்பர்களாகத் தான் இருப்பார்கள் என்றும், இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை "  என அவர் பேசியுள்ளார். இதே வீடியோவை இதற்கு முன்னதாக மே 10, 2022 அன்று பலர் பரப்பியுள்ளனர். 



உண்மை என்ன ?

திருமாவளவன் பேசியதாகப் பரப்பப்படும் 15 வினாடி வீடியோ தொடர்பாக இணையத்தில் தேடியதில், வெளிச்சம் டிவி என்ற யூடியூப் பக்கத்தில் வீடியோ கிடைக்கப் பெற்றது. இது 2019, ஆகஸ்ட் 16ம் தேதியன்று திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையிலுள்ள பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சியில் பேசியது என அறிய முடிகிறது.



திருமாவளவன், இதில் 5:57:45 நிமிடத்தில் பேசியதாவது, நாளைக்கே இந்துமதம் தீண்டாமை இல்லையென பிரகடனப்படுத்தட்டும், நாளைக்கே இந்துமதம் சாதி ஒழியட்டும் என்று பிரகடனப்படுத்தட்டும், நாளைக்கே ஆர்எஸ்எஸ் இயக்கம் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று முழங்கட்டும், நாளைக்கே இந்துமதம் சாதி அடிப்படையிலான இந்த வேறுபாடுகளை ஒருபோதும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அறிவிப்பு செய்யட்டும். பாரதிய ஜனதாவும் ஆர்எஸ்எஸ்-ம் விடுதலை சிறுத்தைகளின் நண்பர்களாகத்தான் இருப்பார்கள் அதிலே எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை” எனப் பேசி இருக்கிறார்.

இந்த வீடியோவை வெட்டி மாற்றி பொருள்படும்படி , பாரதிய ஜனதாவும் ஆர்எஸ்எஸ்-ம் விடுதலை சிறுத்தைகளின் நண்பர்களாகத்தான் இருப்பார்கள் அதிலே எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று சொன்னதை மட்டும் வெளியிட்டு திசை திருப்பியுள்ளனர் .

இந்த வீடியோ தற்போது பதிவிட்டுள்ள savukku_online என்ற டிவிட்டர் பக்கமானது சவுக்கு சங்கரின் அதிகாரபூர்வ பக்கமா? இல்லையா? என்பதை உறுதிபடுத்த அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சித்தபோது, அவர் பதில் அளிக்கவில்லை . அவர் வேறு ஒரு ட்விட்டர் ஐடி யில் பதிவு செய்து வருகிறார் . 



முடிவு :

நம் தேடலில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாரதிய ஜனதாவும் ஆர்எஸ்எஸ்-ம் விடுதலை சிறுத்தைகளின் நண்பர்கள் எனப் பேசியதாக டிவிட்டரில் பகிரப்படும் வீடியோ உண்மையல்ல. சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு குறித்து பாஜக, ஆர்எஸ்எஸ் பேசினால் அவர்களும் விடுதலை சிறுத்தைகளின் நண்பர்கள் என்ற அர்த்தத்தில் பேசியுள்ளார் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க