YouTurn

கனடா பிரதமருக்கு எதிராக கனரா வங்கி முன் பாஜகவினர் போராட்டமா ?

கனடா பிரதமருக்கு எதிராக கனரா வங்கி முன் பாஜகவினர் போராட்டமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

நையாண்டி

பரவிய செய்தி

உத்திரபிரதேசத்தில் "கனடா "நாட்டு பிரதமரை எதிர்த்து "கனரா" வங்கி முன் பாஜக ஆர்ப்பாட்டம்.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கைக்கு பலரும் ஆதரவும் தெரிவித்தாலும், ஆளும் அரசின் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கனடா பிரதமருக்கு எதிராக கனரா வங்கியின் முன் பாஜகவினர் போராட்டம் நடத்தியதாக இப்புகைப்படத்தை முகநூலில் வைரல் செய்து வருகிறார்கள்.

உண்மை என்ன ? 

பாஜகவினர் கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்யும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2020 ஆகஸ்ட் 30-ம் தேதி மாலை மலர் செய்தியில், " ஊட்டி ஏ.டி.சி பகுதியில் பாஜகவின் கட்சி கொடி ஏற்றுவதற்காக புதிதாக கொடிக்கம்பம் நடப்பட்டது. இதற்கிடையில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி பெறவில்லை என்பதால் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் " என இப்புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.



உத்தரப் பிரதேசத்தில் பாஜகவினர் கனடா பிரதமருக்கு எதிராக போராட்டத்தை  நடத்தியதாக செய்தித் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து கனடா பிரதமருக்கு எதிராக போராடியதாக நையாண்டிப்பதிவை பரப்பி இருக்கிறார்கள். இது நையாண்டிப்பதிவு என அறியாமல் உண்மை என நினைத்தும் சிலர் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் படிக்க : பாஜகவினர் அமேசான் டெலிவரி பாயை சிறைப்பிடித்து ரகளை செய்ததாக கிண்டல் வதந்தி !

இதற்கு முன்பாக, சூரரைப் போற்று திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமேசான் டெலிவரி பாயை பாஜகவினர் சிறைப்பிடித்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டதாக நையாண்டிப்பதிவை பரப்பினர்.

மேலும் படிக்க : டெல்லி விவசாயிகள் போராட்டமெனப் பரப்பப்படும் பழைய புகைப்படங்களின் தொகுப்பு

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பல்வேறு வதந்திகள், பழைய புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க