YouTurn

சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என பாஜக எம்.பி பேசினாரா ?

சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என பாஜக எம்.பி பேசினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது - பாஜக எம்.பி கணேஷ் சிங் மக்களவையில் பேச்சு



Facebook link

விரிவான விளக்கம்

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எம்.பி கணேஷ் சிங் என்பவர் சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என மக்களவையில் பேசியதாக புதிய தலைமுறை சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





புதிய தலைமுறையின் சேனலின் நியூஸ் கார்டில் இடம்பெற்ற செய்தியை வைத்து மீம்ஸ் மற்றும் ட்ரோல் பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?

ட்ரோல் செய்யப்படும் பதிவுகளில் இடம்பெற்ற புதிய தலைமுறையின் நியூஸ் கார்டில் தேதி உள்ளிட்டவை இடம்பெறவில்லை. ஆகையால், பாஜக எம்.பி கணேஷ் சிங் பெயரை வைத்து தேடுகையில், பாஜ எம்.பி கணேஷ் சிங் மக்களவையில் " சமஸ்கிருதம் பேசினால் சர்க்கரை, கொழுப்பு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் " என பேசியதாக 2019-ம் ஆண்டு டிசம்பரில் தமிழில் முன்னணி செய்திகள் பலவற்றில் வெளியாகி இருக்கிறது.





2019-ல் நாடாளுமன்றத்தில் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா மீதான விவாதத்தின் போது,  தினமும் சமஸ்கிருதத்தில் பேசினால் நரம்பு மண்டலம் பலப்படுவதுடன், சர்க்கரை நோய் மற்றும் கொழுப்பு கட்டுக்குள் இருக்கும் எனவும் அமெரிக்காவைச் சேர்ந்த கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக பாஜக எம்.பி கணேஷ் சிங் கூறியுள்ளார்.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் ஆய்வின்படி, கம்ப்யூட்டர் புரோகிராமிங் சமஸ்கிருத மொழியில் செய்யப்பட்டிருந்தால் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாமல் மிகச் சரியாக இருந்திருக்கும் என்று கூறினார் " என NDTV செய்தியில் வெளியாகி இருக்கிறது



2019-ல் இதுதொடர்பாக, சமஸ்கிருதம் பேசுவது சர்க்கரை மற்றும் கொழுப்பை சீராக வைத்திருக்கும் - பாஜக எம்.பி.கணேஷ் சிங் மக்களவையில் பேச்சு " என புதிய தலைமுறை சேனலில் நியூஸ் கார்டு ஒன்று வெளியாகி இருக்கிறது.



Facebook link 

மேற்காணும் நியூஸ் கார்டை வெளியான போதே சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு மீம்ஸ் ஆக வைரலாகியது. அந்த நியூஸ் கார்டில் "சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது " எடிட் செய்து தற்போது வைரல் செய்து வருகிறார்கள்.



முடிவு : 

நம் தேடலில், சமஸ்கிருதம் பேசினால் சீதபேதி குணமாகும், அஜீரணம் உண்டாகாது என பாஜக எம்.பி கணேஷ் சிங் மக்களவையில் பேசியதாக வைரல் செய்யப்படும் புதிய தலைமுறை நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்ட போலியானது.

2019-ல் பாஜக எம்.பி கணேஷ் சிங் சமஸ்கிருதம் பேசுவது சர்க்கரை மற்றும் கொழுப்பை சீராக வைத்திருக்கும் என பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க