யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. எனினும், அக்கட்சிக்கு வட மாநிலங்களில் கிடைத்த ஆதரவு, தென் மாநிலங்களில் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவில் படிப்பறிவு மிக்க மாநிலங்களில் பிஜேபி கட்சிக்கு ஒரு தொகுதி கூட...
பரவிய செய்தி
படிப்பறிவு அதிகமாக இருக்கும் மாநிலங்களில் பிஜேபி ஒரு சீட்டு கூட வெற்றி பெறவில்லையாம்.

விரிவான விளக்கம்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. எனினும், அக்கட்சிக்கு வட மாநிலங்களில் கிடைத்த ஆதரவு, தென் மாநிலங்களில் கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்தியாவில் படிப்பறிவு மிக்க மாநிலங்களில் பிஜேபி கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை என்று ஒரு புள்ளி விவரத்துடன் செய்திகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.
சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட பட்டியலில் உள்ள கேரளா, லட்சத்தீவு, மிசோரம், அந்தமான், புதுச்சேரி, சிக்கிம், தமிழ்நாடு, நாகலாந்து உள்ளிட்ட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் பிஜேபி கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தகவல் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.
எனினும், எந்த புள்ளி விவரத்தை வைத்து கல்வியறிவு கொண்ட மாநிலங்களை பட்டியலிட்டனர் என்பது குறித்து தெரியவில்லை. யார் வெளியிட்டார்கள் என்ற விவரமும் தெரியவில்லை. மாநிலங்களின் கல்வியறிவு பட்டியல் மக்கள் தொகை கணக்கெடுப்பை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும்.

இறுதியாக, 2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள கல்வியறிவு சதவீதத்தின் பட்டியல் வெளியாகியது. அதில், தமிழகம் 80.33 சதவீதத்துடன் 14-வது இடத்தில் உள்ளது.
சில பதிவுகளில் 2011 ஆம் ஆண்டு கல்வியறிவு பட்டியலை வைத்து விவாதங்கள் செய்து வருகின்றனர். முதலில், 2011 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தையே கணக்கில் எடுத்துக் கொள்வோம். அதன்படி பார்த்தால், பட்டியலில் தமிழகத்திற்கு முன்பு இருக்கும் மாநிலங்களான திரிபுரா, கோவா, டாமன் & டியூ , டெல்லி, ஹிமாச்சல பிரதேசம், மகாராஷ்டிரா, சண்டிகர் உள்ளிட்ட பகுதிகளில் பிஜேபி வெற்றி பெற்றுள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே ஒரே மாநிலத்தின் கல்வியறிவு பட்டியல் வெளியிடப்படுகிறது. 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு மாநிலங்களின் கல்வியறிவு குறித்த பட்டியல் வெளியாகவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பானது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதால், இனி 2021 ஆம் ஆண்டிலேயே பட்டியல் வெளியாகும்.
ஒட்டுமொத்த இந்திய மாநிலங்களின் கல்வியறிவின் நிலை அரசின் அதிகாரப்பூர்வ தகவலால் மட்டுமே பட்டியலிடப்பட்ட வேண்டும். ஒரு அதிகாரப்பூர்வ தகவல் இன்றி எப்படி பட்டியலிட்டார்கள் எனத் தெரியவில்லை. 2011-க்கு பிறகு 8 ஆண்டுகள் ஆகியதால் மாநிலங்களின் கல்வியறிவு நிலை கண்டிப்பாக மாற்றம் அடைந்து இருக்கும். ஆக, 2011 அடிப்படையிலும் விவாதம் மேற்கொள்வது பொருந்தாது.

இதைத் தவிர்த்து, 2018 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் இந்தியா டுடே பத்திரிகையானது இந்திய மாநிலங்களின் பொருளாதாரம், கட்டமைப்பு, விவசாயம், கல்வியறிவு உள்ளிட்ட பட்டியலை வெளியிட்டது. அதில், கல்வியறிவில் தமிழகம் 2018-ல் மூன்றாம் இடத்திலும், 2017-ல் 12-வது இடத்திலும் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தனர். மேலும், 2011 பட்டியலில் பார்த்த பல மாநிலங்கள் தங்களின் இடங்களில் மாறி இருப்பதை படத்தில் காணலாம். முதல் இடத்தில் இருப்பதாக குறிப்பிட்டு இருக்கும் (2017&2018-ல் முதல் இடம்) ஹிமாச்சல பிரதேசத்தில் பிஜேபி 4 தொகுதியையும் வென்றுள்ளது.
2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பை வைத்து நிலையான ஒரு முடிவுக்கு வர இயலாது. அதேபோன்று, சமீபத்திய அதிகாரப்பூர்வ தரவுகள் இல்லை என்பதால் இவ்வாறு பதிவிடும் பதிவுகள் பொருந்தாத மற்றும் தவறான தகவல் என்றே குறிப்பிட வேண்டும்.