YouTurn

கோமாதாவுக்கு நிதி ஒதுக்காத குப்பை பட்ஜெட் என ஹெச்.ராஜா கூறினாரா ?

கோமாதாவுக்கு நிதி ஒதுக்காத குப்பை பட்ஜெட் என ஹெச்.ராஜா கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கோமாதாவுக்கு நிதி ஒதுக்காத குப்பை பட்ஜெட். பசு மாடுகளை பாதுகாக்க எந்த திட்டமும் பட்ஜெட்டில் இல்லை என்பது ஏமாற்றத்தை தருகிறது. கோசாலை பராமரிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசிடம் பணம் இல்லையென்றால் சொல்லுங்கள், தெருவில் இறங்கி பிச்சை எடுத்துத் தருகிறேன் - எச்.ராஜா (முன்னாள் பாஜக தேசிய செயலாளர்).

விரிவான விளக்கம்

திமுக அரசின் பட்ஜெட் அறிக்கையில் பசு தொடர்பாக எந்த திட்டமும், நிதியும்  இல்லை என்பதால் அதை குப்பை பட்ஜெட் என பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்ததாக நியூஸ் கார்டு ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ? 

தமிழக பட்ஜெட் அறிக்கையில் பசுவிற்கு திட்டங்கள் இல்லை என ஹெச்.ராஜா கருத்து தெரிவிக்கவில்லை. பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியாக எடிட் செய்யப்பட்டது.



ஹெச்.ராஜா பற்றி பரவும் நியூஸ் கார்டு போலியானது என கதிர் நியூஸ் பக்கமும் மறுத்துள்ளது. நேற்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் அறிக்கையை வாசித்த வீடியோவை ஹெச்.ராஜா விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் படிக்க : தமிழக பட்ஜெட்டை வைகோ விமர்சித்ததாக பாஜகவினர் பரப்பும் போலிச் செய்தி !

முடிவு : 

நம் தேடலில், கோமாதாவுக்கு நிதி ஒதுக்காத குப்பை பட்ஜெட் என ஹெச்.ராஜா தமிழக அரசின் பட்ஜெட்டை விமர்சித்ததாக பரவும் செய்தி போலியானது மற்றும் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க