YouTurn

மு.க.ஸ்டாலின் புகழ்ச்சி, மோடி, அமித்ஷா மதவெறியர்கள்.. திருந்தி வாழ்வேன் என்றாரா எச்.ராஜா ?

மு.க.ஸ்டாலின் புகழ்ச்சி, மோடி, அமித்ஷா மதவெறியர்கள்.. திருந்தி வாழ்வேன் என்றாரா எச்.ராஜா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை போல் உலகிலேயே எந்தத் தலைவரும் சிறப்பான முறையில் செயல்படுவதில்லை. மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன். திருந்திவாழ முயற்சிப்பேன். - எச்.ராஜா, பாஜக மூத்த தலைவர்

விரிவான விளக்கம்

தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்தும், பாஜக தலைவர்களாக மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் ஆகியோரை மதவெறியர்கள் எனக் குறிப்பிட்டு பேசியதாக பிபிசி தமிழ் உடைய நியூஸ் கார்டு ஒன்றை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

தமிழ் திரைப்பட இயக்குனர் நவீன் தன் ட்விட்டர் பக்கத்தில், " உண்மை செய்தியா ? " என அதே நியூஸ் கார்டை பகிர்ந்து கேள்வி எழுப்பி இருக்கிறார்.



Twitter link | Archive link 



உண்மை என்ன ? 

செப்டம்பர் 13-ம் தேதி பிபிசி நியூஸ் தமிழ் முகநூல் பக்கத்தில், " தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை போல் இந்தியாவில் எந்த முதல்வரும் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதில்லை. பிரிவினைவாதமே இவரது அரசியல் பின்னணி, அதனால்தான் சட்டவிரோதமாக செயல்படுகிறார். - எச்.ராஜா, பாஜக மூத்த தலைவர் " என நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.



Facebook link 

"பிரிவினைவாதமே தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் அரசியல் பின்னணி, அதனால்தான் அவர் சட்டவிரோதமாக செயல்படுகிறார்" என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்து இருக்கிறார். பிபிசி வெளியிட்ட மேற்காணும் நியூஸ் கார்டில் மு.க.ஸ்டாலினை புகழ்வது போன்றும், மோடி மற்றும் அமித்ஷாவை கடுமையாக விமர்சித்தது போன்று எடிட் செய்து இருக்கிறார்கள்.



முடிவு : 

நம் தேடலில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்தும், மோடி, அமித்ஷா, யோகி ஆதித்யநாத் போன்ற மதவெறியர்களால் நாசமாய் போனேன் எனப் பேசியதாக பரப்பப்படும் பிபிசி தமிழ் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க