YouTurn

பாஜக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 100 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளதாகப் பரவும் தவறான தகவல்!

பாஜக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 100 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்றுள்ளதாகப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பாஜக ஏழு தொகுதிகளில் 200 வாக்குகள் மட்டுமே அதிகம் பெற்று வெற்றி. 23 இடங்களில் வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது. 49 இடங்களில் 1000 வாக்குகள் வித்தியாசத்தில். 86 தொகுதிகளில் 2090 வாக்குகள்.

விரிவான விளக்கம்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் 7 தொகுதிகளில் 200 வாக்குகள், 23 தொகுதிகளில் 500 வாக்குகள், 49 தொகுதிகளில் 1000 வாக்குகள் மற்றும் 86 தொகுதிகளில் 2090 வாக்குகள் என குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?

பரவக் கூடிய தகவல் மற்றும் ஸ்கிரீன் ஷார்ட்டில் ‘இளங்கோ கல்லணை’ என்கிற பேஸ்புக் கணக்கின் பெயர் உள்ளது. அதனைக் கொண்டு தேடியதில், இளங்கோ இத்தகவலை ஜூன் 7ம் தேதி பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. 

இவர் பதிவிட்ட தகவல் உண்மையா என இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப் பூர்வ தளத்தில் உள்ள தரவுகளைக் கொண்டு ஆய்வு செய்தோம். பாஜக வெற்றி பெற்ற 240 தொகுதிகள் மற்றும் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்கிற விவரத்தை spreadsheet-ல் பட்டியலிட்டோம்.

பாஜக வெற்றி பெற்ற தொகுதியிலேயே குறைந்த பட்ச வாக்கு வித்தியாசத்தில் ஜெய்ப்பூர் தொகுதியில் போட்டியிட்ட ’ரவீந்திர நாராயண் பெஹரா’ என்பவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் 1,587 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.  அவர் பெற்ற மொத்த வாக்குகள் 5,34,239.



பாஜக 1,500 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் 6,000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. மற்ற இடங்களில் எல்லாம் 10,000-க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 



நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்த பட்ச வாக்கு வித்தியாசத்தில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை வட மேற்கு தொகுதியில் சிவசேனா கட்சியின் ஷிண்டே அணியைச் சேர்ந்த ’ரவீந்திர தத்தாராம் வைக்கர்’ (48 வாக்குகள்) என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.



இவற்றிலிருந்து பாஜக 1000 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்தில் 79 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாகப் பரவும் தகவல் தவறானது என்பதை அறிய முடிகிறது. 



வாக்கு வித்தியாசம் தொடர்பாகத் தான் தவறான தகவலைப் பதிவிட்டுவிட்டதாக இளங்கோவனும் தனது பேஸ்புக் பக்கத்தில் இன்றைய தினம் பதிவிட்டுள்ளார். ஆனால், அவரது தவறான தகவலைப் பலரும் சமூக வலைத்தளத்தில் பரப்பியுள்ளனர்.

முடிவு:

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 200 வாக்குகள் வித்தியாசத்தில் 7 தொகுதிகளிலும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் 23 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளிலேயே குறைந்த வாக்கு வித்தியாசம் என்பது 1,587-ஆக உள்ளது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க