யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
திமுக ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு என்று ஒன்று கிடைக்காது, கிடைக்கவும் விடமாட்டேன் - அண்ணாமலை அதிரடி

Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
தமிழ்நாடு பாஜகவின் தலைவரான அண்ணாமலை, " திமுக ஆட்சியில் இருக்கும்வரை தமிழகத்திற்கு மத்திய நிதி பங்கீடு என்று ஒன்று கிடைக்காது, கிடைக்கவும் விடமாட்டேன் " என அதிரடியாக கூறியதாக கதிர் நியூஸ் உடைய செய்தி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டிற்கு நிதி பங்கீடு கிடைக்க விடமாட்டேன் என எங்கும் பேசவில்லை, வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து தேடுகையில், கதிர் நியூஸ் முகநூல் பக்கத்தில் வேறு செய்தியே வெளியாகி இருந்தது.
Facebook link
செய்தி கார்டில், " 1972'ல் இருந்து காவிரி பிரச்சனையை வைத்து அரசியல் செய்து குளிர் காய்ந்த ஒரே கட்சி தி.மு.க - அண்ணாமலை அதிரடி ! " என்றே இடம்பெற்று இருக்கிறது. ஆக, இது எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டு என அறிய முடிகிறது.
Twitter link | Archive link
பொய் பரப்புரைகளை நம்ப வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாக போலி நியூஸ் கார்டு குறித்து தமிழ்நாடு பாஜக ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

பொய் பரப்புரையை நம்ப வேண்டாம்!
- மாநில தலைவர் திரு.@annamalai_k pic.twitter.com/WNhFt1EGLY
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) August 6, 2021