YouTurn

மாணவியின் குடும்பத்திற்கு பாஜக 2 கோடி நிதியுதவி, அண்ணாமலையை விமர்சித்த ராமதாஸ் எனப் பரவும் போலிச் செய்திகள் !

மாணவியின் குடும்பத்திற்கு பாஜக 2 கோடி நிதியுதவி, அண்ணாமலையை விமர்சித்த ராமதாஸ் எனப் பரவும் போலிச் செய்திகள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விடுதி காப்பாளரின் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட சிறுமி லாவண்யாவின் குடும்பத்திற்கு 2 கோடி நிதி உதவி செய்ய இருக்கிறோம். எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வு அல்ல - பாஜக தலைவர் அண்ணாமலை



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

தற்கொலை செய்து கொண்ட தஞ்சை மாணவியின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் 2 கோடி நிதியுதவி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.





உண்மை என்ன ?  

மாணவியின் குடும்பத்திற்கு பாஜக நிதியுதவி அளிப்பதாக பரப்பப்படும் நியூஸ் கார்டு தந்தி டிவி சேனலின் சமூக வலைதள பக்கங்களில் பதிவாகவில்லை. இது போலியான செய்தி என தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.



Twitter link | Archive link 

ராமதாஸ் கண்டனம் : 



Twitter link | Archive link



" கேவலமான அரசியல் அண்ணாமலை. நாங்கள் சாதி அரசியல் செய்வதை விட கேவலமான மத அரசியல் செய்கிறார் அண்ணாமலை. இறந்த சிறுமியின் பிணத்தை வைத்து அருவருக்கத்தக்க மதஅரசியல் செய்து கொண்டு இருக்கிறார் - பாமக தலைவர் ராமதாஸ் காட்டம் " என தந்தி டிவி நியூஸ் கார்டு ஒன்றும் பரப்பப்பட்டு வருகிறது.

பாமக நிறுவனர் ராமதாஸ் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்தாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டும் போலியாக எடிட் செய்யப்பட்டதே.



Facebook link 

" தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 105 படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுத்து படகுகளையும் கைதான மீனவர்களையும் மீட்க வேண்டும். படகுகளை ஏலத்தில் விட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலங்கை துடிப்பது நியாயமல்ல. மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் " என வெளியான நியூஸ் கார்டில் போலியான செய்தியை எடிட் செய்துள்ளனர்.



அண்ணாமலை பாஜக அரசியல்  : 





Twitter link | Archive link 

" திமுக ஐடி விங்கை விட திமுக சாராத கொள்கை பற்றாளர்கள் தீவிரமாக களமாடுகிறார்கள். திராவிட மண்ணில் பாஜக கொள்கை எடுபடாது. தமிழர்களிடம் இருந்து பாஜக தப்ப முடியாது. தமிழர்கள் படிப்பறிவு, அரசியல் அறிவுடன் உள்ளனர் என பாஜக தலைவர் அண்ணாமலை " கூறியதாக போலியாக எடிட் செய்யப்பட்ட நியூஸ் கார்டும் பரப்பப்பட்டு வருகிறது.



மேலும் படிக்க : தமிழக அரசியலில் வரிசைக்கட்டி பரப்பப்படும் போலி நியூஸ் கார்டுகள் !

இதற்கு முன்பாக தமிழக அரசியலில் அனைத்து அரசியல் கட்சித் தலைவரையும் வைத்து பரப்பப்பட்ட போலி நியூஸ் கார்டுகள் குறித்த விரிவான கட்டுரையை நாம் வெளியிட்டு இருந்தோம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க