YouTurn

பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்டில் அண்ணாமலை வாக்கு சேகரித்தாரா ?

பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்டில் அண்ணாமலை வாக்கு சேகரித்தாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சென்னையில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்ட் என்பது கூட தெரியாமல் காலில் விழுந்து வாக்கு சேகரித்ததை பொது மக்கள் குழப்பத்துடன் கண்டுகளித்தனர்.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

சென்னை மாநகராட்சியில் தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக வேட்பாளரே நிற்காத வார்டில் சென்று காலில் விழுந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக நியூஸ் 7 தமிழ் சேனல் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





உண்மை என்ன ? 

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்டில் வாக்கு சேகரித்ததாக செய்திகள் ஏதும் வெளியாகவில்லை. வைரல் செய்யப்படும் நியூஸ் கார்டு குறித்து நியூஸ் 7 தமிழ் முகநூல் பக்கத்தில் தேடுகையில், அவ்வாறான எந்த செய்தியும் வெளியாகவில்லை.



Facebook link 

பிப்ரவரி 11-ம் தேதி, " நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்; சென்னை மாநகராட்சி 55வது வார்டில் பரப்புரையில் ஈடுபட்ட அண்ணாமலை தோசை சுட்டு பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார் " என நியூஸ் 7 தமிழ் முகநூல் பக்கத்தில் நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது.



முடிவு : 

நம் தேடலில், சென்னையில் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக வேட்பாளர் போட்டியிடாத வார்ட் என்பது கூட தெரியாமல் காலில் விழுந்து வாக்கு சேகரித்ததாகப் பரப்பப்படும் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க