YouTurn

பாஜக வெற்றிப் பெறும் வார்டுகளில் மாட்டிறைச்சிக்கு தடை என்றாரா அண்ணாமலை ?

பாஜக வெற்றிப் பெறும் வார்டுகளில் மாட்டிறைச்சிக்கு தடை என்றாரா அண்ணாமலை ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பாஜக வெற்றிப் பெறும் வார்டுகளில் மாட்டிறைச்சிக்கு நிரந்தர தடை. ஞாயிறு மட்டுமே அசைவத்திற்கு அனுமதி - அண்ணாமலை



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், " பாஜக வெற்றிப் பெறும் வார்டுகளில் மாட்டிறைச்சிக்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படும், அதேபோல் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அசைவத்திற்கு அனுமதி அளிக்கப்படும் " என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ் 7, தந்தி, ஜூனியர் விகடன் உள்ளிட்ட பல முன்னணி சேனல்களின் நியூஸ் கார்டுகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.







Twitter link 

அதுமட்டுமின்றி, தமிழக பாஜகவின் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும் போஸ்டரிலும் அவ்வாறான கருத்து இடம்பெற்றுள்ளதாகவும் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?  



Twitter link 

வைரல் செய்யப்படும் செய்தியில் இடம்பெற்றுள்ள தமிழக பாஜகவின் போஸ்டரை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், பிப்ரவரி 18-ம் தேதி " 8 மாத காலத்தில் திமுகவின் ஒரே சாதனை, பொய்யை மட்டுமே சொல்லி தொடர்ந்து ஆட்சியில் இருப்பது தான் - மாநில தலைவர் அண்ணாமலை " என வெளியான போஸ்டரில் வைரல் செய்தியை எடிட் செய்து இருக்கிறார்கள்.



பாஜக வெற்றிப் பெறும் வார்டுகளில் மாட்டிறைச்சிக்கு நிரந்தர தடை என போலியான செய்தி பரப்பப்பட்டு வருவதாக தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் சிடிஆர்.நிர்மல் குமார் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.





திமுகவை விமர்சித்து அண்ணாமலை பேசி இருந்த நிலையில், மாட்டிறைச்சிக்கு தடை என்ற போலியான செய்தியை முன்னணி ஊடகங்களின் நியூஸ் கார்டுகளில் எடிட் செய்ததை திமுக ஆதரவாளர்கள் பலரும் பகிர்ந்து வந்துள்ளனர்.

முடிவு : 

நம் தேடலில், பாஜக வெற்றிப் பெறும் வார்டுகளில் மாட்டிறைச்சிக்கு நிரந்தர தடை, ஞாயிறு மட்டுமே அசைவத்திற்கு அனுமதி என தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டுகள் அனைத்தும் போலியாக எடிட் செய்யப்பட்டவை என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க