YouTurn

பாஜகவின் அமர் பிரசாத் காமசூத்ரா புத்தகம் படிப்பதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம் !

பாஜகவின் அமர் பிரசாத் காமசூத்ரா புத்தகம் படிப்பதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ‘காமசூத்ரா’ புத்தகத்தை வாசிக்கிறார் எனப் புகைப்படம் ஒன்றை திமுக மாணவர் அணி மாநில துணை செயலாளர் தமிழ் கா. அமுதரசன் உட்பட பலரும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். 

X link



உண்மை என்ன ? 

பரவக் கூடிய அமர் பிரசாத்தின் படத்தினை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் ஆய்வு செய்ததில் அது போலியாக எடிட் செய்யப்பட்டது  என்பதை அறிய முடிந்தது.

உண்மையான படத்தினை அமர் பிரசாத் அவரது எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் 2023, டிசம்பர் 13ம் தேதியன்று  பதிவிட்டுள்ளார். அப்படத்தில் அவரது கையில் A Primer of Hinduism’ என்னும் புத்தகம் உள்ளது. இதே படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் உள்ளது.



இந்து மதம் குறித்த இப்புத்தகத்தை டி.எஸ்.ஷர்மா எழுதியுள்ளார். இப்புத்தகத்தில், இந்து மதம் மற்றும் அதன் அடிப்படைக் கோட்பாடுகள் கேள்வி பதில் மூலம் மாணவர்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என அமேசான் விற்பனை தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



இந்து மதம் பற்றிய இப்புத்தகத்தின் அட்டைப் படத்தில் ‘காமசூத்ரா’ புத்தகத்தின் படம் இருப்பது போன்று போலியாக எடிட் செய்து திமுகவினர் தவறாக பரப்பி வருகின்றனர். 

மேலும் படிக்க : இலந்தைப் பழ மரத்தின் வயது 2,000 ஆண்டுகள் என அமர் பிரசாத் பதிவிட்ட பொய் தகவல் !

இதற்கு முன்னர் அமர் பிரசாத் பரப்பிய பொய் செய்திகள் பற்றியும் அவரை பற்றிப் பரப்பப்பட்ட பொய் செய்திகள் பற்றியும் கட்டுரையும் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : ஆருத்ரா பண மோசடி : பாஜக அமர்பிரசாத் தலைமறைவு உள்பட பரவும் பல்வேறு போலிச் செய்திகள் !

முடிவு : 

பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் காமசூத்ரா புத்தகத்தைப் படித்துக் கொண்டு இருப்பதாகப் பரவும் புகைப்படம் போலியாக எடிட் செய்யப்பட்டது. அவர் கையில் இருப்பது ‘A Primer of Hinduism’ என்ற புத்தகம். 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க