YouTurn

பிறந்தநாள் கொண்டாட்டம் இறந்தநாளாக மாற்றியது எனப் பரவும் வீடியோ.. உண்மை என்ன ?

பிறந்தநாள் கொண்டாட்டம் இறந்தநாளாக மாற்றியது எனப் பரவும் வீடியோ.. உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

பக்குவமில்லாத இன்றைய இளைஞர்களின் முட்டாள்தனமான தனது நண்பர் பிறந்தநாளை இறந்த நாளாகிய இன்றைய படித்த இளைஞர்கள் கிரீம் நாசியில் ஏறி மூச்சு நின்றுவிட்டது.



Facebook link

விரிவான விளக்கம்

இரவு நேரத்தில் சாலையோரத்தில் நண்பரின் பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடும் இளைஞர்கள் முகத்தில் கேக் பூசுவது, அடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் அந்த இளைஞரின் நாசியில் கேக் அடைத்து இறந்து விட்டதாக 3 நிமிட வீடியோ காட்சி ஒன்று எச்சரிக்கையுடன் சமூக வலைதளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.





Twitter link | Archive link  



உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோ கீழ் ஒரிஜினல் போஸ்ட் என முகநூல் பரிந்துரை செய்யும் லிங்கில் சென்று பார்க்கையில், 2.9 மில்லியன் ஃபாலோயர்ஸ் கொண்ட ஹம்சா நந்தினி எனும் முகநூல் பக்கத்தில் இவ்வீடியோ 2020 மார்ச் 2-ம் தேதி பதிவாகி இருக்கிறது.



Facebook link 

வீடியோ குறித்த பதிவில், " பார்த்ததற்கு நன்றி! இந்தப் பக்கத்தில் சித்தரிக்கப்பட்ட நாடகங்கள் மற்றும் கேலிக்கூத்துகள் உள்ளன என்பதை நினைவில் கொள்ளவும். இந்த குறும்படங்கள் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே ! " எனக் கூறப்பட்டுள்ளது. வீடியோவின் இறுதியிலும் அவ்வாறே கூறப்பட்டுள்ளது.



இப்படி மக்களின் விழிப்புணர்வுக்காக எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் இந்த முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பதிவாகி இருக்கிறது.



இன்றைய இளைஞர்கள் பலரும் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கேக் வெட்டிய பிறகு முகத்தில் பூசுவது, கேக் மீது தலையை வைத்து அமுக்குவது, கடுமையாக அடிப்பது உள்ளிட்ட செயல்களை(Birthday Bumps) கொண்டாட்டமாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்.

இவ்வாறு கொண்டாட்டம் எனக் கருதி அடித்து விளையாடும் செயலால் மோசமான நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. அதுதொடர்பான விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் சென்றடைய வேண்டும்.

முடிவு : 

நம் தேடலில், இளைஞர்கள் நண்பரின் பிறந்தநாளை மோசமாக கொண்டாடிய போது கேக் கிரிம் நாசியில் ஏறி மூச்சு நின்றுவிட்டதாக பரவும் வீடியோ விழிப்புணர்விற்காக எடுக்கப்பட்ட சித்தரிப்பு வீடியோவே. அது விழிப்புணர்வு வீடியோ எனக் குறிப்பிடாததால் உண்மையெனப் பகிர்ந்து வருகிறார்கள் என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க