YouTurn

ஈகை பண்டிகையில் விலங்குகள் பலியிடுவதற்கு ஆதரவாக பில் கேட்ஸ் ட்வீட் வெளியிட்டாரா ?

ஈகை பண்டிகையில் விலங்குகள் பலியிடுவதற்கு ஆதரவாக பில் கேட்ஸ் ட்வீட் வெளியிட்டாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


'தினந்தோறும் மில்லியன் கணக்கில் ஆடுகளும் மாடுகளும் கேஎஃப்சியில், மெக்னோடால்ஸில், பர்கர் கிங்கில் வெட்டப்பட்டு ஏழை நடுத்தர மக்களின் பணத்தை பிடுங்கி கோடீஸ்வரர் ஆகின்றனர் முதலாளிகள். ஆனால் முஸ்லிம்கள் ஈதுல் அல்ஹா பண்டிகையில் பெரும் செல்வந்தர்கள் ஆடுகளையும் மாடுகளையும் அறுத்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர். இங்கும் முஸ்லிம்களை குறை கூறுவோர் மூளையை அடகு வைத்தவர்களே' -பில் கேட்ஸ்




விரிவான விளக்கம்

முஸ்லீம்களுக்கு எதிரான தொடர் வெறுப்பு பிரச்சாரங்களுக்கு இடையில் பில்கேட்ஸ் அவர்கள் முஸ்லீம்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில், பெரிய உணவகங்களில் உணவிற்காக ஆடு, மாடுகள் பலியிடுவதையும், ஈகைப் பண்டிகையில் விலங்குகளை பலியிட்டு ஏழைகளுக்காக வழங்குவதாகவும் ஒப்பிட்டு தன் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களில் பதிவு செய்திருப்பதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.





உண்மை என்ன ?

தமிழில் மொழிமாற்றம் செய்து பரவி வரும் இந்த செய்தியை பற்றி பில்கேட்ஸ் அவர்களின் ட்விட்டர் பக்கத்தில் தேடிப் பார்க்கையில் அவர் முஸ்லிம்களை பற்றியோ, அவர்களது பண்டிகையை பற்றியோ இப்படியொரு ஒரு ட்வீட் வெளியிடவில்லை. இது கடந்த சில ஆண்டுகளாவே பகிரப்பட்டு வருகிறது.

பில்கேட்ஸ் பதிவிட்டதாக பகிரப்படும் தகவல் 2019 ஆகஸ்ட் 19-ம் தேதி @WolfieBabiee எனும் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.



Twitter link | Archive link 

அவர் “மிருகங்களை கொல்வதற்காக முஸ்லீம் மக்கள் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்யும்படியான ட்வீட்களை நான் பார்க்க விரும்பவில்லை கே.எஃப்.சி, மெக்டொனால்ட்ஸ், பர்கர் கிங் போன்றவற்றால் ஒவ்வொரு நாளும் சுமார் 1 மில்லியன் விலங்குகள் கொல்லப்பட்டு பணக்காரர்களுக்கு உணவளிக்கின்றன. அதிலிருந்து நிறைய பணம் சம்பாதிக்கின்றன. ஆனால் ஈகை பண்டிகை சமயத்தில் முஸ்லிம்கள் ஏழைகளுக்கு இலவசமாக உணவளிக்க மிருகங்களை தியாகம் செய்கிறார்கள்” எனும்படியான கருத்தை பதிவுசெய்துள்ளார்.

இந்த கருத்து ட்விட்டரில் நல்ல வரவேற்பை பெற்ற இப்பதிவே தற்போது பில்கேட்ஸ் கூறியதாக அவரின் பெயரில் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது.

முடிவு : 

நம் தேடலில், கேஎஃப்சியில், மெக்னோடால்ஸில், பர்கர் கிங்கில் மில்லியன் கணக்கில் ஆடுகளும், மாடுகளும் பலியிட்டு நடுத்தர மக்களின் பணத்தை முதலாளிகள் பிடுங்குவதாகவும், முஸ்லீம்கள் ஈகை பண்டிகையில் பெரும் செல்வந்தர்கள் ஆடுகளையும், மாடுகளையும் அறுத்து ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கின்றனர் என பில்கேட்ஸ் ட்வீட் பதிவிடவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு வேறொருவர் பதிவிட்ட ட்வீட்டை பில்கேட்ஸ் கூறியதாக ஃபோட்டோஷாப் செய்து தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க