YouTurn

பில் கேட்ஸ் சாக்கடையை சுத்தம் செய்ததாக தினமலர் வெளியிட்ட தவறான செய்தி !

பில் கேட்ஸ் சாக்கடையை சுத்தம் செய்ததாக தினமலர் வெளியிட்ட தவறான செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு சாக்கடைக்குள் நுழைந்து தான் சுத்தம் செய்த வீடியோவை பகிர்ந்த பில் கேட்ஸ்



X link  | Archive link 

விரிவான விளக்கம்

முன்னாள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் CEO பில் கேட்ஸ் உலக கழிப்பறை தினமான நவம்பர் 19ம் தேதியன்று, சாக்கடைக்குள் இறங்கி தான் சுத்தம் செய்த வீடியோவை பகிர்ந்ததாக ‘அனைவரும் சமம்’ என்கிற தலைப்பில்  ‘தினமலர்’ நியூஸ் கார்டினை பதிவிட்டுள்ளது. 



உண்மை என்ன ? 

உலக கழிப்பறை தினத்தன்று பில் கேட்ஸ் பாதாள சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ததாக தினமலர் வெளியிட்டுள்ள நியூஸ் கார்டில் உள்ள தகவலை ஆராய முக்கிய வார்த்தைகளைக் கொண்டு தேடினோம். 

பில் கேட்ஸ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நவம்பர் 19ம் தேதியன்று வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அப்பதிவில் ‘இந்த ஆண்டு உலக கழிப்பறை தினத்திற்காக பிரஸ்ஸல்ஸின் கழிவுநீர் அமைப்பின் மறைக்கப்பட்ட வரலாற்றையும், உலகளாவிய ஆரோக்கியத்தில் கழிவுநீரின் பங்கையும் ஆராய்ந்தேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 



 










View this post on Instagram























 

A post shared by Bill Gates (@thisisbillgates)






பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள கழிவுநீர் அருங்காட்சியகத்தை பில் கேட்ஸ் பார்வையிட்டது குறித்து ‘NDTV’ இணையதளத்தில் நவம்பர் 21ம் தேதி செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பிரஸ்ஸல்ஸில் கழிவுநீர் அமைப்பின் வரலாற்றை ஆவணப்படுத்தும் விதமாக நிலத்தடி அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இதனை நேரில் பார்வையிட்ட பில் கேட்ஸ் தனது அனுபவத்தைப் பதிவு செய்துள்ளார். 



“நிலத்தடி அருங்காட்சியகத்தில் நான் அனைத்தையும் நேரடியாக அனுபவித்தேன். 1800களில் நகரின் கழிவு நீர் சென்னே (Senne) என்ற நதியில் விடப்பட்டது. அது காலரா தொற்றுநோய்க்கு வழிவகுத்து பலர் பாதிக்கப்பட்டனர். ஆனால், இன்று 200 மைல் (321 கி.மீ) நீளமுள்ள சாக்கடை அமைப்பும் சுத்திகரிப்பு நிலையங்களும் நகரின் கழிவுகளை மேலாண்மை செய்கிறது. இந்த அருங்காட்சியகம் பிரஸ்ஸல்ஸில் கழிவு நீர் வரலாற்றினை ஆவணப்படுத்தும் இடமாக உள்ளது” எனக் கூறியுள்ளார். 

இதே தகவல் ‘Economic times’, ‘Hindustan times’ ஊடகங்களிலும் செய்தியாக வந்துள்ளது. பில் கேட்ஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட வீடியோவிலோ, இது தொடர்பாக வெளியான செய்தியிலோ அவர் சாக்கடையைச் சுத்தம் செய்ததாகக் குறிப்பிடப்படவில்லை.

இதில் இருந்து பில் கேட்ஸ் அனைவரும் சமம் எனச் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ததாக ஒரு தவறான தகவலை ‘தினமலர்’ நியூஸ் கார்டாக  வெளியிட்டுள்ளதை அறிய முடிகிறது.

பில் கேட்ஸ் இதற்கு முன்னரும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சில நிகழ்வுகளை இதே போன்று செய்துள்ளார். 

முடிவு : 

நம் தேடலில், பில் கேட்ஸ் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்ததாக தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டில் உள்ள செய்தி உண்மை அல்ல. அவர் பிரஸ்ஸல்ஸில் உள்ள கழிவு நீர் வரலாறு குறித்த அருங்காட்சியகத்தைத்தான் பார்வையிட்டுள்ளார் என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க