YouTurn

சென்னையில் 10 இருசக்கர வாகனங்கள் திருடிய 3 பாஜகவினர் கைதா ?

சென்னையில் 10 இருசக்கர வாகனங்கள் திருடிய 3 பாஜகவினர் கைதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

போலீசாரிடம் சிக்கிய பாஜக திருடர்கள் ! சென்னையில் பல்வேறு பகுதிகளில் 10 இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 பாஜகவினர் கைது : ரூ.15 லட்சம் மதிப்பிலான 6 புல்லட், 2 பல்சர், 1 டியூக், 1 யமஹா என 10 வாகனங்கள் பறிமுதல் !

விரிவான விளக்கம்

சென்னையில் இரு சக்கர வாகனங்களை திருடிய 3 பாஜகவினரை போலீசார் கைது செய்ததாக நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.



Facebook link | Archive link  



கடந்த ஆண்டிலேயே, இந்த நியூஸ் கார்டை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். தற்போது தேர்தல் சமயம் என்பதால் வைரல் செய்து வருகிறார்கள். ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய்ந்து பார்த்தோம்.

உண்மை என்ன ?

நியூஸ் 7 சேனலின் லோகோ உடன் இருக்கும் நியூஸ் கார்டில், " போலீசாரிடம் சிக்கிய பாஜக திருடர்கள் " என நெருக்கமாக எழுதி இருப்பதை பார்க்க முடிகிறது. சென்னையில் சிக்கிய பைக் திருடர்கள் குறித்து தேடிப் பார்க்கையில், " சென்னையில் பல்வேறு பகுதிகளில் 10 இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 இளைஞர்கள் நுங்கம்பாக்கத்தில் கைது " என 2020 அக்டோபர் 3ம் தேதி வெளியான நியூஸ் 7 தமிழின் உண்மையான நியூஸ் கார்டு கிடைத்தது.



Twitter link | Archive link 

நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட செய்தியில், பைக் திருடியவர்கள் பாஜகவினர் எனக் குறிப்பிடவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக வேறு செய்திகள் ஏதும் கிடைக்கிறதா எனத் தேடிப் பார்க்கையில், நியூஸ் கார்டில் இடம்பெற்ற இருசக்கர வாகனங்களின் அதே புகைப்படம், கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படத்துடன் 2020 அக்டோபர் 4-ம் தேதி வெளியான புதிய தலைமுறை செய்தி கிடைத்தது.

" போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக புல்லட் வாகனத்தில் வந்த நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த சஃபி(27) என்பதும், ஓட்டி வந்த புல்லட் திருடிய வாகனம் என்பதும் தெரிய வந்தது. சஃபிக்கை வைத்து இவரது கூட்டாளிகளான கேரளாவைச் சேர்ந்த சிபி(23) மற்றும் விருதுநகரைச் சேர்ந்த அமீர்ஜான்(36) ஆகியோரை போலீசார் கைது செய்தனர் " என செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் 10 இரு சக்கர வாகனங்கள் திருடிய 3 பாஜகவினர் கைது என பரப்பப்படும் நியூஸ் 7 தமிழ் சேனலின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க