YouTurn

பீகாரில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு எனப் பரவும் வீடியோ உண்மையா?

பீகாரில் வாக்கு இயந்திரத்தில் முறைகேடு எனப் பரவும் வீடியோ உண்மையா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இதோ இப்போது பீகார் எலெக்க்ஷனில் வேறு சின்னத்திற்கு பொத்தானை அழுத்தினால் தாமரைக்கு ஓட்டு பதிவாகும் காட்சி.



Facebook link | Archive link 

விரிவான விளக்கம்

2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்குப் பதிவின் போது வேறு சின்னத்திற்கு வாக்களித்தால் பாஜகவின் தாமரை சின்னத்தில் வாக்கு விழுவதாகக் கூறி 8 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.





ஏற்கனவே, வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இல்லை, முறைகேடுகள் நிகழ்வதாக குற்றச்சாட்டுகள் எழுகையில் இப்படியொரு வீடியோவை தேர்தல் நேரத்தில் பரப்பி இருக்கிறார்கள். பீகார் தேர்தலின் முடிவுகள் இன்று(நவம்பர்10) வெளியாகி வருகையில் இந்த வீடியோவை அதிகம் பகிரவும் செய்கிறார்கள்.

உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் இருந்து புகைப்படத்தை எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " யானை பொத்தானை அழுத்தினால் தாமரைக்கு வாக்கு " விழுவதாக இந்தி மொழியில் கடந்த 2019-ம் மே மாதமே முகநூலில் இவ்வீடியோ வெளியாகி இருக்கிறது. கடந்த ஆண்டில் இருந்தே இவ்வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது எனத் தெளிவாய் தெரிகிறது.



Facebook link | Archive link 



மேலும், வைரல் செய்யப்படும் வீடியோயை காணுகையில் அந்த பெண் வாக்கு செலுத்த இரண்டு விரல்களை வைத்து பட்டனை  அழுத்துகிறார். ஒரு விரல் யானை சின்னத்திலும், ஒரு விரல் தாமரை சினத்திலும் இருப்பதை நம்மால் காண முடிகிறது. இரண்டு விரல்களை வைத்து அழுத்தும் போது தாமரை சின்னத்தில் சிவப்பு லைட் எரிகிறது.



ஆக, இரண்டு விரல்களை வைத்து யானை சின்னத்தின் பட்டனை அழுத்துவது போன்று தாமரை சின்னத்தையும் அழுத்தி முறைகேடு நடப்பது போன்று வீடியோ எடுத்து இருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆனால், இதை செய்தது யார் மற்றும் எங்கு எடுக்கப்பட்டது என்கிற விவரங்களை நம்மால் உறுதியாக கூற முடியவில்லை. எனினும், இந்த வீடியோவிற்கும் தற்போதைய பீகார் தேர்தலுக்கும் தொடர்பில்லை என தெளிவாய் தெரிகிறது.

பீகார் 2020 சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் நிதிஷ் குமார் கூட்டணி முன்னிலை வகித்து வருவதாக முடிவுகள் வெளியாகி வருகிறது. எனினும், வாக்கு எண்ணிக்கை இன்று முழுவதும் நடைபெறும் என்றும், முழுமையான முடிவுகள் வெளியாக தாமதம் ஆகலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், பீகார் தேர்தலில் யானை சின்னத்தில் வாக்களித்தால் தாமரையில் சின்னத்தில் வாக்கு விழுவதாகவும் பரவும் வீடியோ தவறானது என்றும், அதற்கும் பீகார் தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க