யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
இராகுல் காந்தி பாதையாத்திரையில் பாக்கிஸ்தான் கொடி. அடுத்த பிரிவினை கண்டிப்பாக உண்டு ஹிந்து சொந்தங்கள் எல்லாம் போருக்கு தாயார் ஆகுங்கள்.

விரிவான விளக்கம்
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முடிவடைந்து தற்போது கர்நாடகா மாநிலத்திற்கு முன்னேறி சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் பாகிஸ்தான் நாட்டின் கொடியை பயன்படுத்தி உள்ளதாக வலதுசாரிகள் 29 நொடிகள் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

Archive link
வலதுசாரி ஆதரவு நிலைபாட்டில் வதந்திகளை பரப்பும் இந்தி சேனலான சுதர்சன் நியூஸ் உடைய உரிமையாளர் சுரேஷ் சவுகானே ட்விட்டர் பக்கத்தில் இவ்வீடியோவை பகிர்ந்து இருக்கிறார். இப்பதிவு ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
வைரல் செய்யப்படும் வீடியோவில் பேரணியில் வருபவர்கள் பச்சை நிறக் கொடியுடன் கையில் ஏந்தி உள்ள பேனரில், "ராகுல், ஜனநாயக இந்தியாவின் தலைவர்.. பாலகாடு.. IUML " போன்றவை இடம்பெற்று இருக்கிறது. IUML என்பது இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி(Indian Union Muslim League) உடைய பெயர்.

Twitter link
கேரளாவில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் இந்தியன் யூனியன் முஸ்லீம் கலந்து கொண்ட வீடியோ குறித்து தேடுகையில், செப்டம்பர் 26ம் தேதி " Muslim Youth League guruvayur " எனும் முகநூல் பக்கத்தில் வைரல் செய்யப்படும் வீடியோ பதிவிடப்பட்டு இருக்கிறது.

Facebook link
செப்டம்பர் 22ம் தேதி கேரளாவில் இந்திய ஒற்றுமை(பாரத் ஜோடா) யாத்திரையில் கேரள மாநிலத்தின் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டு ராகுலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.
Facebook link
இந்தியாவில் பச்சைக் கொடியை பார்த்தாலே பாகிஸ்தான் கொடி எனப் பாயும் கூட்டம் அதிகம் இருக்கிறது. இதற்கு முன்பாக, காங்கிரஸ், திமுக கூட்டங்களில் பயன்படுத்திய முஸ்லீம் லீக் கட்சிக் கொடியை பாகிஸ்தான் கொடி எனப் பலமுறை வதந்திகளைப் பரப்பி இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : பெங்களூரில் பாகிஸ்தான் கொடி என நினைத்து முஸ்லீம் லீக் கொடியை அகற்றிய போலீஸ் !
மேலும் படிக்க : திமுக பிரச்சாரத்தில் இருந்த முஸ்லீம் லீக் கொடியை பாகிஸ்தான் கொடியென வதந்தி !
மேலும் படிக்க : பச்சைக் கொடியினாலே பாகிஸ்தான் தானா ? | ராஜஸ்தான் ஊர்வல வதந்திகள்.
இதேபோல், ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக் கூறிய பெண்ணுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக வதந்திப் பரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : பாகிஸ்தான் ஜிந்தாபாத் சொன்ன பெண்ணுடன் ராகுல் காந்தி நடை பயணமா?
முடிவு :
நம் தேடலில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பாகிஸ்தான் கொடி இடம்பெற்றதாகவும் பரப்பப்படும் தகவல் தவறானது. அது பாகிஸ்தான் கொடி அல்ல, கேரளாவில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கொடி என அறிய முடிகிறது.