
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter link | Archive link
விரிவான விளக்கம்


உண்மை என்ன ?
ராகுல் காந்தியின் முன்பாக மது இடம்பெற்று இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " ஜனவரி 7ம் தேதி ப்ரன்ஜோய் எனும் பத்திரிக்கையாளர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், " பாரத் ஜோடோ யாத்திரையின் போது பஞ்சாப் மாநிலத்தின் கர்னல் பகுதியில் இருந்து சில கி.மீ தொலைவில் உள்ள தாபாவில் ராகுல் காந்தியை சந்தித்து பேசியதாக " ராகுல் காந்தியின் முன்பாக டீ இடம்பெற்று இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்
It was sheer coincidence: travelling to Punjab this morning, I crossed the Bharat Jodo Yatra. With some difficulty and a scuffle, I was able to meet Rahul Gandhi while he was eating at a dhaba a few kms from Karnal. We discussed politics, economics and India’s richest men.. 1/2 pic.twitter.com/yg4394bFfT
— ParanjoyGuhaThakurta (@paranjoygt) January 7, 2023
Twitter link | Archive link
ராகுல் காந்தி தாபாவில் டீ குடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மதுவையும், சிக்கன் உணவையும் வைத்து எடிட் செய்து இருக்கிறார்கள். மேலும், எடிட் செய்த படத்தையே உண்மையான படம் எனக் கூறி பரப்பவும் செய்கிறார்கள்.

மேலும் படிக்க : Image of Rahul Gandhi with a glass of alcohol and chicken is photoshopped
இதற்கு முன்பாக, ராகுல் காந்தியின் எடிட் செய்யப்பட்ட இப்படம் இந்திய அளவில் வைரலாகிய போதே யூடர்ன் ஆங்கிலத்தில் கட்டுரை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : முன்னாள் அமைச்சர் ராகுல் காந்திக்கு “ஷூ லேஸ்” கட்டி விட்டதாக பொய் செய்தி வெளியிட்ட நியூஸ் 18 தமிழ் !
முடிவு :
நம் தேடலில், இந்திய ஒற்றுமை பயணத்தின் போது ராகுல் காந்தி மது அருந்துவதாக பரப்பப்படும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது. அவர் டீ குடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் மதுவை எடிட் செய்து தவறாக பரப்பி வருகிறார்கள் என்பதை அறிய முடிகிறது.