YouTurn

பாக்யராஜ் பற்றி பயில்வான் ரங்கநாதன் விமர்சித்ததாக பரவும் போலி நியூஸ் கார்டு !

பாக்யராஜ் பற்றி பயில்வான் ரங்கநாதன் விமர்சித்ததாக பரவும் போலி நியூஸ் கார்டு !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பாக்யராஜே குறைப்பிரசவத்தில் பிறந்தவர்தான்! ஏழு மாதத்தில் பிறந்தவர் பாக்யராஜ் என்று எம்.ஜி.ஆருக்கே தெரியும். முந்தானை முடிச்சு படத்தில் நானும் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பில் நடந்த அஜால்குஜால் சமாச்சாரங்களை எடுத்துச் சொன்னால் பாக்யராஜின் மானம் கப்பலேறும் - பயில்வான் ரங்கநாதன் .



Facebook link 

விரிவான விளக்கம்

ஏப்ரல் 20-ம் தேதி பாஜகவின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், " பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப் பிரசவத்தில் பிறந்தவர்கள் " என விமர்சித்து பேசியது சர்ச்சையையும், கண்டனத்தையும் பெற்றது. இதையடுத்து, அவரின் பேச்சு கண்டனங்களை பெற அதே நாள் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், பாக்யராஜே குறைப்பிரசவத்தில் பிறந்தவர்தான் என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்து பேசியதாக ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



உண்மை என்ன ?

வைரலாகும் நியூஸ் கார்டு குறித்து ஜூனியர் விகடன் முகநூல் பக்கத்தில் தேடுகையில், ஏப்ரல் 20-ம் தேதி இயக்குநர் பாக்யராஜ் உடைய சர்ச்சை கருத்து மற்றும் அவர் மன்னிப்பு கேட்ட செய்திகள் மட்டுமே வெளியாகி இருக்கிறது. மாறாக, பயில்வான் ரங்கநாதன் விமர்சித்ததாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.



மேலும், " விமர்சனத்துக்கும் இழிவு செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது " என நடிகர் சாந்தனு பாக்யராஜ் கூறிய கருத்துக் குறித்து நியூஸ் கார்டு ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அந்த நியூஸ் கார்டில் பயில்வான் ரங்கநாதன் விமர்சித்ததாக எடிட் செய்து பரப்பி வருகிறார்கள்.



முடிவு : 

நம் தேடலில், பாக்யராஜே குறைப்பிரசவத்தில் பிறந்தவர்தான் என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்ததாக பரவும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க