YouTurn

2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா ?

2020-ல் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் இயற்கை எய்தினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் உடைய சகோதரி பிரகாஷ் கயுர் மே 30-ம் தேதி இயற்கை எய்தியுள்ளார். ஆனால், இந்திய ஊடகங்கள் அவரின் இறப்பு குறித்து செய்திகளே வெளியிடவில்லை என்ற மீம் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டு...

பரவிய செய்தி

சுதந்திரத்திற்கு உயிர் நீத்த பகத் சிங்கின் சகோதரி பிரகாஷ் கயுர் 30-5-2020 இயற்கை எய்தினார். துரதிர்ஷ்டவசமாக இந்த தேசிய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் மரணம் குறித்து செய்தி சேனல்கள் மூச்சு விடவில்லை.

விரிவான விளக்கம்

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் உடைய சகோதரி பிரகாஷ் கயுர் மே 30-ம் தேதி இயற்கை எய்தியுள்ளார். ஆனால், இந்திய ஊடகங்கள் அவரின் இறப்பு குறித்து செய்திகளே வெளியிடவில்லை என்ற மீம் பதிவு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மையை கூறுமாறு யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

பகத் சிங் சகோதரி மரணம் என்ற கீ வார்த்தைகளை கொண்டு தேடிய பொழுது, 2014-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி வெளியான இந்திய செய்திகளில் பகத் சிங் சகோதரி பிரகாஷ் கயுர் கனடாவில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது.



2014 செப்டம்பர் 28-ம் தேதி பகத் சிங் உடைய 107 வது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்ட நாளில் பிரகாஷ் கயுர் கனடாவின் ப்ராம்ப்டன் பகுதியில் தன்னுடைய 93-வது வயதில் இயற்கை எய்தினார். செப்டம்பர் 29-ம் தேதி இந்திய ஊடகங்களில் அவரின் இறப்பு குறித்த செய்திகள் வெளியாகி உள்ளது.

பிரகாஷ் கயுர் 1980களில் இருந்து கனடாவில் தன்னுடைய மகன் ரூபிந்தர் சிங் மல்கி உடன் வசித்து வந்துள்ளார். அவர் இறப்பதற்கு முன்பாக 6 ஆண்டுகளாக உடலநலக்குறைவு காரணமாக படுத்த படுக்கையாக வாழ்ந்து வந்துள்ளார்.

முடிவு : 

நமக்கு கிடைத்த தகவலில், பகத் சிங் சகோதரி 2014-ல் கனடாவில் இயற்கை எய்தி உள்ளார். அவரின் இறப்பு பற்றி செய்திகளிலும் வெளியாகி இருக்கிறது. ஆனால், 2020 மே 30-ம் தேதி இறந்து உள்ளதாக தவறான தகவலை பகிர்ந்து வருகிறார்கள். பிரகாஷ் கயுர் இறந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு அவர் இறந்து விட்டதாக தகவல்கள் இந்திய அளவில் பகிரப்பட்டு வருகிறது. தவறான தகவலை பகிர வேண்டாம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க