YouTurn

தமிழ்நாட்டில் காவல் ஆய்வாளர் லஞ்சம் வாங்கி பிடிபட்டதாகப் பரவும் பெங்களூரு வீடியோ!

தமிழ்நாட்டில் காவல் ஆய்வாளர் லஞ்சம் வாங்கி பிடிபட்டதாகப் பரவும் பெங்களூரு வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜனவரி 29, 2026 அன்று பெங்களூருவில் காவல் ஆய்வாளர் ஒருவர் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், மறுநாள் லோக் ஆயுக்தா அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பது தெளிவாகிறது. இந்நிலையில் பலரும் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது என்று குறிப்பிட்டு தவறாக பதிவிட்டும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

பரவிய செய்தி

Inspector இப்படி மாட்டிகிட்டாரே'.. கையும் களவுமாக பிடிச்சதும் இப்படியா..? Sketch போட்ட அதிகாரிகள்..



X Link | Archive Link 

விரிவான விளக்கம்

தமிழ்நாட்டில் காவல் ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கியதற்காக பிடிபட்ட காட்சி என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. 


வீடியோவில் காவல் சீருடையில் உள்ளவரை எங்கும் செல்லவிடாமல் சிலர் கைகளைப் பிடித்துக் கொண்டு வலுகட்டாயமாக நிற்க வைத்திருப்பதை தெளிவாகக் காண முடிகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல என்பதை அறிய முடிந்தது. 


Times of india” ஊடகப் பக்கத்தில் ஜனவரி 20, 2026 அன்று பரவி வரும் வீடியோவைக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், “பெங்களூரு பகுதியில், காவல்துறை அதிகாரி ஒருவர் ரூ.4 லட்சம் லஞ்சம் பெறும் போது ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிபட்டார். அப்போது பொதுமக்களின் இரக்கத்தை பெற அவர் கூச்சலிட்டு அலறினார். அந்த காவலர் K.P.அகரஹாரா நிலையத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூ என்று சொல்லப்படுகிறது” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 


#Bengaluru cop got caught red-handed by anti corruption sleuths while accepting Rs 4 lakh #bribe…he started screaming to gain public sympathy.
The cop is inspector Govindaraju of K P Agrahara station. He threatened to implicate a man in a cheating case.@timesofindia pic.twitter.com/iz3KTKZvJL

— TOI Bengaluru (@TOIBengaluru) January 30, 2026


இதே போன்று, “The Hindu” ஊடகப் பக்கத்திலும், “₹4 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் கே.பி. அக்ரஹாரா காவல் நிலைய ஆய்வாளர் ஒருவரை, லோக் ஆயுக்தா போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். குற்றம் சாட்டப்பட்ட ஆய்வாளர் கோவிந்தராஜு, லஞ்சம் கொடுக்காவிட்டால் சிட் ஃபண்ட் தொடர்பான மோசடி வழக்கில் அவரைச் சிக்க வைப்பதாக மிரட்டிப் பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது“ என்று குறிப்பிட்டு அதில் செய்தி வெளியிட்டிருந்தனர். 



இதன் மூலம், ஜனவரி 29, 2026 அன்று பெங்களூருவில் காவல் ஆய்வாளர் ஒருவர் ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்ட நிலையில், மறுநாள் லோக் ஆயுக்தா அதிகாரிகளால் பிடிக்கப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பது தெளிவாகிறது. இந்நிலையில் பலரும் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்துள்ளது என்று குறிப்பிட்டு தவறாக பதிவிட்டும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.


முடிவு: 


நம் தேடலில், தமிழ்நாட்டில் காவல் ஆய்வாளர் ஒருவர் லஞ்சம் வாங்கியதற்காக பிடிபட்ட காட்சி என்று பரவும் வீடியோ,  பெங்களூருவில் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க