யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
BJP தொடர்ந்து ஆட்சி செய்தால் ஒரு நாள் சந்திரனில் இந்தியாவின் தேசியக் கொடி பறக்கும்.. தவறி காங்கிரஸ் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தால் இந்திய தேசியக்கொடியில் சந்திரனின் பிறை இருக்கும்.. எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.. BBC சேனலின் பிரபல பத்திரிகையாளர் மார்க் டூலி

Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
பிபிசி செய்தியின் பிரபல பத்திரிகையாளர் மார்க் டூலி, " பாஜகவின் ஆட்சி நீடித்தால் இந்தியாவின் தேசியக் கொடி சந்திரனில் பறக்கும், அதுவே காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தேசியக் கொடியில் சந்திரனின் பிறை இருக்கும் " எனும் கருத்தைக் கூறியதாக மார்க் டூலி புகைப்படத்துடன் கூடிய பதிவு வைரல் செய்யப்பட்டு வருகிறது. அப்பதிவை பாஜக ஆதரவாளரான கல்யாண் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
உண்மை என்ன ?
85 வயதான வில்லியம் மார்க் டூலி நியூ டெல்லியில் பிபிசியின் முன்னாள் பணிபகத் தலைவராக 20 ஆண்டுகள் பதவி வகித்தவர். பிரபல பத்திரிகையாளரான மார்க் டூலி நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு குறித்து பெருமைகொள்ளும் வகையில் கருத்து தெரிவித்ததாக வதந்திகள் பரவுவது முதல் முறை அல்ல.
" பாஜக தொடர்ந்து ஆட்சி செய்தால் ஒரு நாள் சந்திரனில் இந்தியாவின் தேசியக் கொடி பறக்கும்.. தவறி காங்கிரஸ் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தால் இந்திய தேசியக்கொடியில் சந்திரனின் பிறை இருக்கும் " எனும் கருத்தை மார்க் டூலி கூறினாரா எனத் தேடிப் பார்த்தால் எந்த செய்திகளும், அதிகாரப்பூர்வ பதிவுகளும் இல்லை.
மாறாக, மார்க் டூலி மோடியின் அரசை புகழ்ந்து கூறியதாக இந்திய அளவில் பரப்பப்பட்ட மற்றொரு பொய்யான பதிவு குறித்து 2021 பிப்ரவரி 7-ம் தேதி ஈஸ்ட் கோஸ்ட் டெய்லி எனும் இணையதளம் வெளியிட்ட செய்தியின் தொடக்கத்திலேயே ஆங்கிலத்தில் இந்த கருத்தும் இடம்பெற்று இருக்கிறது.

" கரையான் நிறைந்த பழைய ஆலமரத்தை மோடி அழித்து வருகிறார் " எனும் தலைப்பில் மோடியின் அரசாங்கம் குறித்து மார்க் டூலி தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டதாக கூறி வைரலாகியது. யாரோ ஒருவருடைய கருத்தை மார்க் டூலி பெயரில் தவறாக வைரல் செய்வதாக 2019 மே மாதம் ஆல்ட் இணையதளம் கட்டுரை வெளியிட்டு இருந்தது. எனினும், அந்த கட்டுரையை வைத்து அதே போலி செய்தி பரவச் செய்தது நகைச்சுவையின் உச்சம்.

Twitter link
வைரல் செய்யப்படும் கருத்தை மார்க் டூலி பெயர் இல்லாமல் கூட சிலர் ட்விட்டர் உள்ளிட்டவையில் பகிர்ந்து இருப்பதை பார்க்க முடிந்தது. யாரோ ஒருவர் பதிவிடும் கருத்துக்களை பிரபலமானவர்களின் பெயரை வைத்து தவறாக வைரல் செய்து விடுகிறார்கள்.
மார்க் டூலி மோடி அரசாங்கத்தை புகழ்ந்தோ அல்லது காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டியதாக பல வதந்திகள் வெளியாகி அவர் தரப்பில் மறுக்கவும் செய்யப்பட்டுள்ளது.

2018-ல் " ராகுல் காந்தி ஒருபோதும் பிரதமராக மாட்டார் அல்லது ராஜாவை உருவாக்கும் நிலையில் இருக்கவும் மாட்டார். எப்போதும் இல்லை " எனக் கூறியதாக வதந்திகள் பரவியது. இதற்கு மார்க் டூலி மறுப்பு தெரிவித்து இருந்தார். 2013-ல் சோனியா காந்தி குறித்து வெறுப்பான உள்ளடக்கத்தை எழுதவில்லை என மார்க் டூலி ஈமெயில் மூலம் மறுத்த செய்தியும் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க : மது வாங்குவோருக்கு உணவு மானியத்தை நிறுத்த வேண்டும் என ரத்தன் டாடா கருத்து தெரிவித்தாரா ?
முடிவு :
நம் தேடலில், பாஜக தொடர்ந்து ஆட்சி செய்தால் ஒரு நாள் சந்திரனில் இந்தியாவின் தேசியக் கொடி பறக்கும்.. தவறி காங்கிரஸ் இந்தியாவில் ஆட்சிக்கு வந்தால் இந்திய தேசியக்கொடியில் சந்திரனின் பிறை இருக்கும் எனும் கருத்தை பிபிசியின் மார்க் டூலி கூறியதாக பரப்பப்படும் தகவல் தவறானது. இக்கருத்தை மார்க் டூலி கூறியதாக எந்த பதிவுகளும் இல்லை. அதேபோல், மார்க் டூலியை வைத்து பல வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன என்பதை அறிய முடிந்தது.
உண்மை என்ன ? 85 வயதான வில்லியம் மார்க் டூலி நியூ டெல்லியில் பிபிசியின் முன்னாள் பணிபகத் தலைவராக 20 ஆண்டுகள் பதவி வகித்தவர். பிரபல பத்திரிகையாளரான மார்க் டூலி நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு குறித்து பெருமைகொள்ளும் வகையில் கருத்து தெரிவித்ததாக வதந்திகள் பரவுவது முதல் முறை அல்ல.