யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
இஸ்ரேலிய தயாரிப்புகளை புறக்கணிக்க எளிதான வழி. பார்கோடு எண் 729 இல் தொடங்கினால், அதை இஸ்ரேலிய தயாரிப்பாகக் கருதுங்கள். 

விரிவான விளக்கம்
இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் கடந்த அக்டோபர் 7 அன்று தொடங்கி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 1400 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். இதே போன்று இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை காசாவில் 7028 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பார்கோடு எண் 729 என்று ஆரம்பிக்கும் பொருட்களை புறக்கணியுங்கள். இவையெல்லாம் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டவை. இவற்றில் கேஎஃப்சி (KFC), மெக்டோனால்ட்ஸ் (McDonalds), நைக் (Nike), அடிடாஸ் (Adidas), டாம்மி ஹில்ஃபிகர் (Tommy Hilfiger), கூச்சி (Gucci), கிட்கேட் (KitKat), மேகி (Maggi), ஓரியோ (Oreo), லேய்ஸ் (Lays), ஸ்டார்பக்ஸ் (Starbucks), கோக்க-கோலா (Coca-Cola), ரெட்புல் (Red Bull), பெப்சி (Pepsi), ஸ்ப்ரைட் (Sprite), மோட்டரோலா (Motorola), ஹச்பி (HP), நெஸ்லே (Nestle), ரெவ்லான் (Revlon) மற்றும் டவ் (Dove) போன்ற பொருட்கள் அடங்கும் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில் அந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டவை அல்ல என்பதை உறுதி செய்ய முடிந்தது.

பார்கோடுகள் என்பது இயந்திரம் படிக்கக்கூடிய வடிவத்தில், குறிப்பிடத்தக்க தரவுகளைக் கொண்டு சேமிக்கப்பட்ட ஒரு குறியீடாகும். பொதுவாக 1D பார்கோடுகள் பொருட்களுக்கும், 2D பார்கோடுகள் பணபரிவர்த்தனைகளுக்கும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றை ஸ்கேன் செய்ய, லேசர் ஸ்கேனர் மற்றும் 2D இமேஜர் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் 1D பார்கோடுகளில் உள்ள 729 என்ற எண் எதைக் குறிக்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ததில், இவை GS1 என்று அழைக்கப்படுகின்ற முதல் மூன்று இலக்கங்களைக் குறிக்கின்றன என்பதை அறிந்தோம். இந்த GS1 எண்கள் பொதுவாக EAN-13 வகை பார்கோடுகளில் பல்வேறு வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதில் 729 என்பது இஸ்ரேலைக் குறிக்கின்றது.

இருப்பினும் இவற்றில் GS1 என்பது ஒரு பொருளைத் தயாரிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் நாட்டை குறிப்பதில்லை. இது அந்த நிறுவனங்கள் பதிவுசெய்துள்ள GS1 உறுப்பு நாடுகளையேக் குறிக்கின்றன.

இதற்கு உதாரணமாக, இந்தியாவில் விற்கப்படும் லேய்ஸ் (Lays) சிப்ஸ்களுக்கான பார்கோடு எண்ணை மதிப்பாய்வு செய்வோம். அமெரிக்க நிறுவனத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பெப்சிகோ நிறுவனம், லேய்ஸ் பிராண்டின் முழு உரிமையாளர் என்பதை அறிய முடிந்தது. ஆனால் இந்தப் பொருளுக்கான பார்கோட்டில் உள்ள GS1 இலக்கங்கள் இந்தியாவை குறிக்கும் '890' என்ற இலக்கங்களுடன் தொடங்குகின்றன. ஏனெனில் இந்த தயாரிப்பு நிறுவனம் PepsiCo India Holdings Pvt. Lmt என்ற இந்தியாவின் அதிகார வரம்பிற்கு உட்பட்டு செயல்படுகிறது.
இதன் மூலம் முதல் மூன்று இலக்கமான GS1 இலக்கங்கள் ஆனது ஒரு பொருளை உற்பத்தி செய்தியும் நிறுவனம் நிறுவப்பட்ட நாட்டைக் குறிப்பதில்லை என்பதை உறுதி செய்ய முடிந்தது.
மேலும் பரவி வரும் பதிவுகளில் குறிப்பிட்டுள்ள பொருட்கள் அனைத்தும் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவையா என்பது குறித்தும் ஆய்வு செய்தோம். அதில் பின்வரும் தரவுகள் கிடைத்தன.
இதன்மூலம் பரவி வரும் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்கள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தது அல்ல என்பதை அறிய முடிந்தது.
மேலும் படிக்க: இஸ்ரேல் தாக்குதலில் இருந்து தப்பிக்க பாலஸ்தீன முஸ்லீம்கள் இந்தியக் கொடியைப் பயன்படுத்துவதாகப் பரவும் பொய் !
மேலும் படிக்க: ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் குழந்தையை சமைத்து கொடுத்ததாகப் பரவும் ஈராக் எம்பி ஐஎஸ்ஐஎஸ் பற்றிப் பேசும் பழைய வீடியோ !
முடிவு:
நம் தேடலில், 'பார்கோடு எண் 729 என்று ஆரம்பிக்கும் பொருட்களை புறக்கணியுங்கள். இவையெல்லாம் இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டவை' என்று பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

இஸ்ரேலுடன் சண்டை. "729" மற்றும் "500" பார்கோடு தொடங்கி எந்த தயாரிப்பு வாங்க வேண்டாம். பரப்புங்கள். ஆர்! pic.twitter.com/HrnquHCDat
— ✍ (@zainabrose888) July 13, 2014

- கேஎஃப்சி (KFC) - கார்பின், கென்டக்கி, அமெரிக்கா
- மெக்டொனால்ட்ஸ் (McDonalds) - சான் பெர்னார்டினோ, கலிபோர்னியா
- நைக் (Nike) - ஓரிகான், அமெரிக்கா
- அடிடாஸ் (Adidas) - பவேரியா, ஜெர்மனி
- டாமி ஹில்ஃபிகர் (Tommy Hilfiger) - அமெரிக்கா
- கூச்சி (Gucci) - புளோரன்ஸ், இத்தாலி
- கிட்கேட் (KitKat) - இங்கிலாந்து
- மேகி (Maggi) - சுவிட்சர்லாந்து
- ஓரியோ (Oreo) - அமெரிக்கா
- லேய்ஸ் (Lays) - அமெரிக்கா
- ஸ்டார்பக்ஸ் (Starbucks) - சியாட்டில், அமேரிக்கா
- கோகோ கோலா (Coca-Cola) - அமெரிக்கா
- ரெட் புல் (Red Bull) - ஆஸ்திரியா
- பெப்சி (Pepsi) - அமெரிக்கா
- ஸ்ப்ரைட் (Sprite) - மேற்கு ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது மற்றும் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டது
- மோட்டோரோலா (Motorola) - அமெரிக்கா
- ஹெச்பி (HP) - அமெரிக்கா
- நெஸ்லே (Nestle) - சுவிட்சர்லாந்து
- ரெவ்லான் (Revlon) - அமெரிக்கா
- டவ் (Dove) - அமெரிக்கா