YouTurn

இனி வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் இயங்குமா ?

இனி வங்கிகள் வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் இயங்குமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வங்கிகளுக்கு வாரத்தில் 6 வேலை நாட்கள் மற்றும் இரண்டாவது, நான்காவது வாரத்தில் மட்டும் சனிக்கிழமை விடுமுறை என நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இனி வங்கிகளுக்கு வாரத்தில் 5 வேலை நாட்கள் மட்டுமே என்ற செய்தி சமூக வலைதளங்களில், இணைய செய்திகளில் பரவி வருகிறது. அதில், இனி வாரத்தில் 5 வேலை நாட்கள்...

பரவிய செய்தி

அதிரடி உத்தரவு !

வங்கிகளுக்கு இனி வாரத்தில் 5 வேலை நாட்கள் மட்டுமே . அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை.

விரிவான விளக்கம்

வங்கிகளுக்கு வாரத்தில் 6 வேலை நாட்கள் மற்றும்  இரண்டாவது, நான்காவது வாரத்தில் மட்டும் சனிக்கிழமை விடுமுறை என நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இனி வங்கிகளுக்கு வாரத்தில் 5 வேலை நாட்கள் மட்டுமே என்ற செய்தி சமூக வலைதளங்களில், இணைய செய்திகளில் பரவி வருகிறது.

அதில், இனி வாரத்தில் 5 வேலை நாட்கள் மட்டுமே வங்கி இயங்கும் , வேலை நேரம் காலை 9.30 முதல் மாலை 5.30 மணி வரை என்றும் கூறியுள்ளனர். மேலும், இதை நடைமுறைப்படுத்த ஆர்.பி.ஐ ஒப்புதல் அளித்து உள்ளதாகவும், வருகிற ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் கூறி வருகின்றனர்.

ஆனால், வங்கிகளின் வேலை நாட்கள் குறித்து ஊடகங்களில், சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளுக்கு இந்தியன் ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது.



ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயாள் அறிக்கையில், " சில ஊடகங்களில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் பெயரில் வங்கிகளுக்கு 5 வேலை நாட்கள் மட்டுமே என செய்திகள் வெளியாகி வருகிறது. இவ்வாறு வெளியாகும் தகவல்கள் உண்மையில் சரியானது இல்லை. அவ்வாறான அறிவிப்புகள் எதையும் ஆர்.பி.ஐ வெளியிடவில்லை" எனத் தெரிவித்து உள்ளார்.

பல ஆண்டுகளாகவே வங்கியின் வேலை நாட்கள் குறித்த தவறான செய்திகள் தொடர்ச்சியாக பரவி வருகின்றன. தற்போது மீண்டும் பரவிய வதந்திகளுக்கு ஆர்.பி.ஐ மறுப்பு தெரிவித்து உள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.