YouTurn

வங்கதேசத்தில் நிவாரணம் அளிப்பதாகச் சொல்லி இந்துக்கள் மதம்மாற்றம் எனப் பரவும் பொய்!

வங்கதேசத்தில் நிவாரணம் அளிப்பதாகச் சொல்லி இந்துக்கள் மதம்மாற்றம் எனப் பரவும் பொய்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்துக்களை மதம் மாற்ற இந்து மதக் கயிறுகள் இஸ்லாமியர்களால் அகற்றப்படுவதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல.

பரவிய செய்தி

நிவாரனம் பெற மதம் மாறனுன்னா அது மதமா அல்லது…

X link

விரிவான விளக்கம்

வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு நிவாரண உதவி அளிக்கப்படுகிறது. அப்படி உதவி செய்யும் போது இந்துக்களை இஸ்லாமியர்களாக மதம் மாற கட்டாயப்படுத்துகின்றனர் என்றும் இந்துக்களின் மத அடையாளங்கள் அவர்களது கழுத்திலிருந்து அறுத்தெறியப்படுகிறது என்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வலதுசாரிகளால் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?

பரவக்கூடிய வீடியோவில் ஒருவரது உடையில் ‘Unite Tv’ என்றுள்ளது. இதனை கொண்டு தேடினோம். இஸ்லாம் மதக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ‘Unite Tv’ என்ற யூடியூப் பக்கத்தில் இதேபோன்று பல வீடியோக்கள் இருப்பதைக் காண முடிந்தது. வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நலத்திட்டங்களை இவர்கள் செய்துள்ளனர்.


கழுத்தில் உள்ள கயிற்றை அகற்றும் வேறொரு வீடியோ ’Incognito’ என்ற எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பங்களாதேஷில் இந்துக்கள் அணிந்துள்ள மத கயிற்றை இஸ்லாமியர்கள் அகற்றுகின்றனர் என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

அதற்கு வங்கதேசத்தை மையமாகக் கொண்டு செயல்படும் ‘RumorScanner’ என்ற factcheck ஊடகத்தைச் சேர்ந்த ரஹ்மான் என்பவர் பதில் அளித்துள்ளார். அதில், வீடியோவில் உள்ள சிறுவன் இந்து மதத்தைச் சேர்ந்தவர் அல்ல என்றும் நிவாரண கொடுப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என்றும் விளக்கப்பட்டுள்ளது.


இஸ்லாம் மதத்தில் தாயத்துக் கட்டும் வழக்கம் கிடையாது. ஆனால், பல முஸ்லிம்கள் இந்த நடைமுறையைப் பின்பற்றுகின்றனர். இது தவறான நடைமுறையென இஸ்லாமியர்கள் சிலர் பிரச்சாரம் செய்வதுண்டு. அப்படி, வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்பவர்கள் முஸ்லிம்களின் கழுத்திலிருந்த தாயத்துகளை அகற்றியுள்ளனர்.

Youtube link


இம்மாதிரியான சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட பல வீடியோக்கள் இந்து மதத்தினர் முஸ்லிம்களால் மதம் மாற்றப்படுகின்றனர் என்ற பொய் செய்தியைக் கொண்டு மதப் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் வதந்தி பரப்புகின்றனர். அப்படியான ஒரு வீடியோதான் இதுவும்.

கீழ்க்கண்ட வீடியோ ’அப்துல்லா பின் அர்ஷத்’ என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அவர் ‘Unite TV’ பக்கத்தின் நிறுவனராக உள்ளார். மேலும் IRCB (Islamic Research Center Bangladesh), IFWF (Islamic Faith and Welfare Foundation) மற்றும் At-Taiyeba Publication ஆகியவற்றின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

பரவக்கூடிய இவ்வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்கிற தகவல் கிடைக்கவில்லை. தகவல் கிடைக்கும்பட்சத்தில் கூடுதல் தகவலாக இக்கட்டுரையில் சேர்க்கிறோம்.

முடிவு:

வங்கதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் முஸ்லிம்கள் - இந்துக்களை மதம் மாற கட்டாயப்படுத்துவதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அவர்கள் இஸ்லாமியர்கள் அணிந்துள்ள தாயத்துகளைத்தான் அகற்றுகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க