YouTurn

வெடி பொருள் கடத்தியதாகப் பரப்பப்படும் பங்களாதேஷ் போதை பொருள் கடத்தல் வீடியோ!

வெடி பொருள் கடத்தியதாகப் பரப்பப்படும் பங்களாதேஷ் போதை பொருள் கடத்தல் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

RDX எப்படி கடத்துகிறானுங்க


X link

விரிவான விளக்கம்

புர்கா அணிந்து RDX வெடி பொருள் கடத்தப்படுவதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வலதுசாரிகளால் பரப்பப்படுகிறது. அந்த வீடியோவில் புர்கா அணிந்த இருவரை காவல் துறையினர் பிடித்து, புர்காவிற்குள் மறைத்து வைத்திருந்த ஏதோ ஒரு பொருளை கையகப்படுத்துகின்றனர். 



உண்மை என்ன?

பரவக் கூடிய வீடியோவில் காவல் துறையினர் போல் இருப்பவர்கள் நீல நிற சீருடை அணிந்துள்ளனர். ஆனால், இந்தியாவில் காவல் துறையினருக்கு காக்கி நிற சீருடைதான் உள்ளது. இதில் இருந்து இந்த வீடியோ இந்தியா எடுக்கப்பட்டதில்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது.

எனவே பரவும் வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு இணையத்தில் தேடினோம். இச்சம்பவத்தின் முழு வீடியோ 2021, மார்ச் 11ம் தேதிSmile Tv Bangla’ என்ற யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 



பெங்கால் மொழியில் உள்ள அதன் நிலைத்தகவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து படித்ததில், ‘சிட்டகொங் (Chittagong) உள்ள ரௌசன் (Raozan) என்னும் பகுதியில் காவல் துறையினர் சோதனையின் போது போதைப்பொருள் கடத்தியவர்கள் கைது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிய முடிந்தது. இந்த இடம் பங்களாதேஷில் உள்ளது. 

மேற்கொண்டு இச்சம்பவம் குறித்து தேடியதில், இதே செய்தி Raozan Tv’ என்ற பேஸ்புக் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் ‘Cvoice24’ என்னும் தளத்தில் பெங்கால் மொழியில் வெளியாகி இருந்த செய்தியையும் மொழிபெயர்த்து படித்தோம். 



அதில், ’சாகர் (20), அமீனா பேகம் (19) என்பவர்கள் கர்ப்பிணிப் பெண் போல் நடித்து போதை பொருள் கடத்த முயற்சித்தனர். காவல் துறையினர் அவர்களை பிடித்து சிறையில் அடைத்தது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

இவற்றில் இருந்து இது 2021ம் ஆண்டு பங்களாதேஷ் நாட்டில் நடந்த கடத்தல் சம்பவம் என்பதை அறிய முடிகிறது. அவர்கள் மீது அந்நாட்டு அரசு சட்ட நடவடிக்கையும் எடுத்துள்ளது. அந்த வீடியோவை வெடிகுண்டு கடத்தல் எனத் தவறாக சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர். 

மேலும் படிக்க : உத்தரப் பிரதேசத்தில் கள்ள ஓட்டுப் போட முயன்றவர்கள் கைது எனப் பரவும் பழைய வீடியோ!

இந்த பொய் செய்தியை பரப்பிய சிதம்பரம் என்னும் எக்ஸ் பக்கம் இதற்கு முன்னர் பல பொய் செய்திகளையும் வெறுப்பு பிரச்சாரத்தையும் பரப்பியுள்ளது. அது பற்றிய உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுள்ளோம். 

மேலும் படிக்க : ராமநவமி ஊர்வலத்தில் கல்லெறியத் திட்டமிட்டிருந்ததைக் காவல் துறை கண்டறிந்ததாகப் பரவும் தவறான தகவல்!

முடிவு: 

RDX வெடி பொருள் கடத்தியதாக பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல. அது 2021ம் ஆண்டு பங்களாதேஷ் நாட்டில் நடந்த போதை பொருள் கடத்தல் சம்பவம்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க