YouTurn

’கஜகஸ்தானில் ஹிஜாப் அணியத்தடை’ என்று வெளியிடப்பட்ட செய்திகள்! உண்மை என்ன?

’கஜகஸ்தானில் ஹிஜாப் அணியத்தடை’ என்று வெளியிடப்பட்ட செய்திகள்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

முக அடையாளங்களை மறைக்கும் வகையில் ஆடை அணிய தடை என்பதை ‘ஹிஜாப்’ அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தவறாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

பரவிய செய்தி

இஸ்லாமிய நாடான கஜகஸ்தானில், பொது இடங்களில் ஹிஜாப் அணிய தடை விதிப்பு; முகத்தை மறைத்துவிட்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க நடவடிக்கை.




Link / Archive Link


image.png


Link


image.png


Link 

விரிவான விளக்கம்

முஸ்லீம்கள் அதிகம் வாழும் நாடான கஜகஸ்தானில் ஹிஜாப் அணியத்தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், முகத்தை மறைத்துவிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடுபவதை தடுக்கவே இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாகவும் News 18 English, தினமலர், பாலிமர் செய்திகள், சாணக்யா போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



உண்மை என்ன?


’கஜகஸ்தானில் ஹிஜாப் அணியத்தடை’ என்ற செய்தி குறித்து இணையத்தில் தேடியதில், ‘Reuters’ செய்தி முகமை கடந்த ஜீன் 30ஆம் தேதி வெளியிட்டிருந்த ஒரு செய்திக் குறிப்பை காணமுடிந்தது. 


image.png


அதில் கஜகஸ்தான் ஜனாதிபதி காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் கடந்த ஜீன் 30ஆம் தேதி, ‘தனிநபர்கள்  பொது இடங்களில் முகத்தை மறைக்கும் வகையிலான ஆடைகள் அணிவதைத் தடைசெய்யும்’ சட்டத்தில் கையெழுத்திட்டது பற்றி குறிப்பிடுப்பட்டுள்ளது. 


இந்த சட்டத்தில் ’மதம் சம்பந்தமான உடைகள் பற்றி வெளிப்படையாகக் எதுவும் குறிப்பிடவில்லை’ என்று ‘Reuters’ செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில், ’Facial Recognition’ தொழில்நுட்பம் என்று சொல்லப்படும் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தால் அடையாளம் காண முடியாத வகையில் முகத்தை மறைத்து ஆடை அணிவது பொதுவெளியில் தடை செய்யப்படவேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது. ’முழுவதும் முகத்தை மறைக்கும் வகையில் கருப்பு உடைகள் அணிவதைவிட, நமது தேசிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆடைகளை அணியலாம்’ என்று கஜகஸ்தான் ஜனாதிபதி ஏற்கனவே கருத்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.


மேலும், மருத்துவ காரணங்களுக்காகவும், விளையாட்டு கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகிய காரணங்களுக்காகவும் மட்டுமே இந்த நடைமுறையிலிருந்து விதி விலக்கு அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், ங்கும் ’ஹிஜாப்’ என்ற வார்த்தை குறிப்பிடப்படவே இல்லை. 


பொதுவாகவே, ஹிஜாப், நிஹாப், பர்கா போன்ற வார்த்தைகள் ஒரே அர்த்தத்துடன் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் இவையெல்லாம், வெவ்வேறானவை ஆகும். ’பர்கா’ என்பது உடல் முழுவதும் மூடப்படும் வகையில் இருப்பதாகவும். கண்களுக்கு மட்டும் வலை போன்ற அமைப்பு இருக்கும். அதன் வழியாகவே இதனை அணியும் பெண்கள் பார்ப்பார்கள். ஆனால், மற்றவர்களால் இந்த பெண்களின் கண்களை காணமுடியாத வகையில் இருக்கும்.


image.png


’நிஹாப்’ உடல் முழுவதும் மூடப்பட்டாலும், கண்கள் வெளியில் தெரியும் படியாக இருக்கும். முகத்தில் மூக்கு, வாய் மட்டுமே மூடப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். ’ஹிஜாப்’ என்பது கழுத்தும் தலையும் மறைக்கும் படி அணியப்பட்டிருக்கும். அதில் முகம் முழுவதும் வெளிப்படையாக இருக்கும். 


‘முகத்தை மறைக்கும் வகையில் ஆடைகளை அணிவதைத் தடைசெய்வதாக சொல்லும் போது, முகத்தை மறைக்காத வகையில் இருக்கும் ’ஹிஜாப்’-ஐ இதில் சேர்க்கவே முடியாது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து பார்க்கும் போது, ’கஜகஸ்தானில் முக அடையாளத்தை மறைக்கும் வகையிலான உடைகள் பொதுவெளியில் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பை ‘ஹிஜாப் அணியத்தடை’ என்று தவறாக செய்தி வெளியிட்டுள்ளனர் என்பது தெளிவாக நிரூபணமாகிறது.


முடிவு:


கஜகஸ்தானில் முக அடையாளங்களை மறைக்கும் வகையில் ’நிகாப்’, ’பர்தா’ ஆகியவற்றை அணிய தடை விதிக்கப்பட்டதுள்ளதை திரித்து, முகத்தை மறைக்காத வகையில் அணியப்படும் ‘ஹிஜாப்’ அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தவறாக பரப்பப்படுகிறது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க