YouTurn

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தாக்குதல் நடத்தியதாக பரவும் வீடியோ!

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் தாக்குதல் நடத்தியதாக பரவும் வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் காணொளி 2024ஆம் ஆண்டு ஹவுத்தியின் ஆறாவது இராணுவ பிராந்தியத்தின் ரிசர்வ் பகுதியைச் சேர்ந்த சிறப்புப் பிரிவுகள், பயிற்சியில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டதாகும்.

பரவிய செய்தி

காலைலயே கண்ணிவெடி வச்சு, பாக் இராணுவ வீரர்கள மொத்தமா தூக்கிருக்கானுங்க பலூச் ஆர்மி...

பலூச் எல்லைக்குள்ள வந்தாலே அடிப்போம்னு எச்சரிக்கை வேற கொடுத்திருந்தானுங்க பலூச்…இருந்தும் அகங்காரம் தலைக்கு ஏறினால் இப்படித்தான்.

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழல் நிலவியது. அப்போது பலூச் அமைப்பின் தலைவர் மிர் யார் பலூச், இனி பலுசிஸ்தானை பாகிஸ்தானின் மாகாணமாகக் குறிப்பிட வேண்டாம் என்றும், நாங்கள் பாகிஸ்தானியர்கள் அல்ல, பலுசிஸ்தானியர்கள் என்றும், பலூசிஸ்தான் குடியரசாக எங்களை உலகம் அங்கீகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது பலூசிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதாக 28 நொடிகள் கொண்ட காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது Khalid Selik என்ற எக்ஸ் பக்கத்தில் ஏப்ரல் 5, 2024 அன்று இந்த காணொளி பதிவிடப்பட்டிருந்தது. அதில் இந்த காணொளி ”ஜெருசலேம் எங்கள் இலக்கு" என்ற தலைப்பில் ஹவுதிகளின் இராணுவப் பயிற்சியைச் சித்தரிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 


இது குறித்து மேலும் தேடிப் பார்த்தோம். MMY1444 என்ற எக்ஸ் பக்கத்தில் மார்ச் 10, 2024 அன்று “'To Jerusalem We March’ maneuver for symbolic units of the Sixth Military Region Reserve Forces” என்ற தலைப்பில் 42:42 நிமிடங்கள் கொண்ட ஒரு காணொளி பதிவிடப்பட்டிருந்தது. அந்த காணொளியில் சரியாக 32:08வது நிமிடத்தில் பரவி வரும் காட்சிகள் இடம்பெற்றிருந்ததைக் காணமுடிந்தது. 


இதையடுத்து keywords மூலம் இது குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது Mmy. ye என்ற இணையதளப்பக்கத்தில் "Jerusalem is Our Joy" maneuver for symbolic units from the Sixth Military Region's reserve forces” என்ற தலைப்பில் பரவி வரும் காணொளி காட்சிகளும், போருக்காகப் பயிற்சி செய்யும் நிறையப் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது. 


image.png


மேலும் அதில், ஹவுத்தியின் ஆறாவது இராணுவ பிராந்தியத்தின் ரிசர்வ் பகுதியைச் சேர்ந்த சிறப்புப் பிரிவுகள், பயிற்சியில் ஈடுபட்டதாகவும், இதில் விமானப்படை, கனரக மற்றும் நடுத்தர ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது. 


முடிவு: 

நம் தேடலில், பரவி வரும் காணொளி 2024ஆம் ஆண்டு ஹவுத்தியின் ஆறாவது இராணுவ பிராந்தியத்தின் ரிசர்வ் பகுதியைச் சேர்ந்த சிறப்புப் பிரிவுகள், பயிற்சியில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டதாகும். இதை தற்போது பாகிஸ்தானில் நடந்தது போல் தவறாகப் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க