YouTurn

பாபர் மசூதியின் கம்பீரத் தோற்றம்?| புகைப்படம் உண்மையா ?

பாபர் மசூதியின் கம்பீரத் தோற்றம்?| புகைப்படம் உண்மையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியாவில் இருக்கும் பாபர் மசூதி பகுதியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், அயோத்தியாவில் இருக்கும் பாபர் மசூதியின் கம்பீரத் தோற்றம் என ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் ஃபாலோயர்...

பரவிய செய்தி

அயோத்தியாவில் உள்ள பாபர் மசூதியின் கம்பீரத் தோற்றம்.

விரிவான விளக்கம்

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்தியாவில் இருக்கும் பாபர் மசூதி பகுதியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், அயோத்தியாவில் இருக்கும் பாபர் மசூதியின் கம்பீரத் தோற்றம் என ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து யூடர்ன் ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டது.



ஃபாலோயர் தரப்பில் அனுப்பப்பட்ட புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து அறிய அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து பார்க்கையில், பல ஆண்டுகளாக இப்புகைப்படம் இணையத்தில் இருப்பதை பார்க்க முடிந்தது.

மேலும் தொடர்ந்து புகைப்படம் குறித்து தேடிய பொழுது " junagadh " என்ற வார்த்தை கிடைத்தது. அந்த வார்த்தையை வைத்து தேடிய பொழுது, அது குஜராத் மாநிலத்தில் இருக்கும் நகரம் என அறிய முடிந்தது.



குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகாத் என்ற நகரில் இருக்கும் " ஜமா மசூதி " உடைய புகைப்படம் " Holidify " என்ற சுற்றுலா இணையதளத்தில் இருந்து நமக்கு கிடைத்தன. அப்புகைப்படத்தையே அயோத்தியாவில் உள்ள பாபர் மசூதி எனப் பரப்பி இருக்கிறார்கள்.



Youtube video | archived link 

இதேபோன்று, 2010-ல் " The Mahabat Maqbara mosoleum & Jammi mosque " என்ற தலைப்பில் ஜமா மசூதியின் பகுதிகள் காண்பிக்கப்படும் வீடியோ யூட்யூப்-ல் வெளியாகி இருக்கிறது.

நம்முடைய தேடலில் இருந்து, குஜராத்தில் இருக்கும் ஜமா மசூதியை அயோத்தியில் இருக்கும் பாபர் மசூதி என பரப்பி உள்ளனர் என்பதை அறிய முடிகிறது. மேலும், பல ஆண்டுகளாக இப்புகைப்படங்கள் இணையத்தில் தவறாக பகிரப்பட்டு உள்ளன என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.