YouTurn

ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு கும்பகோணத்தில் கூடிய பக்தர்கள் எனத் தவறாகப் பரவும் பழைய வீடியோ !

ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு கும்பகோணத்தில் கூடிய பக்தர்கள் எனத் தவறாகப் பரவும் பழைய வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தமிழக மக்கள் ஒருங்கிணைந்து இது ஆன்மீக மண் என்று நிரூபித்த தருணம்.. இடம் :  கும்பகோணம்.

X post link | Archive link 

விரிவான விளக்கம்

னவரி 22ம் தேதி(நேற்று) அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நடைபெற்று முடிந்தது. ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு தமிழக கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்து உள்ளதாக தினமலர் பொய் செய்தியை வெளியிட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பாஜகவினர் அதை பரப்பவும் செய்தனர். ராமர் கோயில் திறப்பு நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை கோயில்களில் திரையிட தமிழ்நாட்டில் காவல்துறை அனுமதி மறுத்ததாக வழக்கும் தொடரப்பட்டது.

இதையடுத்து, தனியார் கோயில்கள், மண்டபங்களில் நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதி தேவையில்லை, ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கீழ் கோயில்களில் ஒளிபரப்ப செயல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

விரிவாக படிக்க : ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வதந்திகள் மூலமாக அரசியல் செய்யும் தலைவர்கள் !

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் கூடிய பக்தர்கள் கூட்டம் எனக் கூறி 15 நொடிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.





உண்மை என்ன ? 

வைரல் செய்யப்படும் வீடியோவில் காண்பிக்கப்படும் தெப்பக்குளம் கும்பகோணத்தை சேர்ந்தது அல்ல. அந்த வீடியோவில் நம்ம ஆற்காடு எனும் வாட்டர் மார்க் இடம்பெற்று உள்ளது. அதை வைத்து தேடுகையில், நம்ம ஆற்காடு எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜனவரி 7ம் தேதியே இந்த வீடியோ பதிவாகி இருந்துள்ளது.



அதில், ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோவில் மக்கள் வெள்ளத்தில் தெப்பக்குளம் காட்சி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கொண்டு தேடுகையில், கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி யூடியூப் சேனலில் இதே வீடியோ வெளியாகி இருக்கிறது.



2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலின் புதிய தெப்பகுளம் திறப்பை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை கும்பகோணம் எனத் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

மேலும் படிக்க : எடப்பாடி பழனிச்சாமி அயோத்தி விழாவில் கலந்து கொண்டதாகப் பரவும் வதந்திகள் !

மேலும் படிக்க : காஷ்மீரின் லால் சவுக்கில் ராமர் படம் காட்சிப்படுத்தப்பட்டதாகப் பரவும் தவறான தகவல்!

முடிவு : 

நம் தேடலில், அயோத்தி ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு கும்பகோணத்தில் கூடிய பக்தர்களின் கூட்டம் எனப் பரவும் வீடியோ தவறானது. அந்த வீடியோ கடந்த ஆண்டு ரத்தினகிரி பாலமுருகன் திருக்கோயிலின் புதிய தெப்பகுளம் திறப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க