YouTurn

புது பொலிவுடன் மாற்றப்பட்ட அயோத்தியாவின் ரயில் நிலையமா ?

புது பொலிவுடன் மாற்றப்பட்ட அயோத்தியாவின் ரயில் நிலையமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஜெய் ஸ்ரீஇராம். புது பொலிவுடன் அயோத்தியா ரயில் நிலையம் உங்கள் பார்வைக்கு.



Facebook link

விரிவான விளக்கம்

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியாவில் உள்ள ரயில் நிலையத்தின் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து புதுப்பொலிவுடன் தயாராகி உள்ளதாக 1 நிமிட வீடியோ ஒன்று ட்விட்டர், முகநூல் உள்ளிட்டவையில் இந்திய அளவில் வைரலாகி வருகிறது.





 



உண்மை என்ன ?

அயோத்தியா என வைரல் செய்யப்படும் வீடியோவின் 33-வது நொடியில் குஜராத் சுற்றுலாத் துறையின் லோகோ இடம்பெற்று இருப்பதை பார்க்க முடிந்தது.



இதை அடிப்படையாக வைத்து ரயில் நிலையம் குறித்து தேடுகையில், குஜராத் காந்தி நகர் ரயில் நிலையம் தொடர்பான வீடியோவில் ரயில் நிலையத்தில் உள்ள தூண்களின் அமைப்பு பொருந்தி போவதை பார்க்க முடிந்தது.



கூகுள் மேப் தளத்தில் காந்தி நகர் ரயில் நிலையம் குறித்த பதிவுகளில் சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவே தற்போது அயோத்தியா என தவறாக வைரல் செய்யப்பட்டு வருகிறது.



2020 ஆகஸ்ட் மாதம் வெளியான செய்தியில், ராமர் கோவில் கட்டி முடிப்பதற்கு முன்பாக அயோத்தியாவில் உள்ள ரயில் நிலையம் இரண்டு ஆண்டுகளுக்குள் சீரமைத்து மறுக்கட்டுமானம் செய்யப்படும் என்றும், இதற்கான பட்ஜெட் தொகை 80 கோடியில் இருந்து 104 கோடியாக உயர்த்தப்பட்டு உள்ளதாகவும் " வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம் தேடலில், புது பொலிவுடன் அயோத்தியா ரயில் நிலையம் என பரப்பப்படும் வீடியோ குஜராத் காந்தி நகரில் உள்ள ரயில் நிலையம் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க