
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்த இடம் தொடர்பாக நீண்ட விசாரணைக்குப் பிறகு நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு ‘2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம்’ என்று 2019, நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கியது. இதன் அடிப்படையில் தற்போது ராமர் கோயில் கட்டப்பட்டு வரும் 22ம் தேதி (ஜனவரி) திறப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பாபர் மசூதியை இடித்த இடமும் ராமர் கோயில் கட்டும் இடமும் வேறு வேறு..
இஸ்லாமிய சகோதரர்களுக்கு இதை விட பெரிய துரோகம் என்ன இருக்க முடியும்?
ராமர் எங்கே பிறந்தார்? மசூதி இருந்த இடத்திலா? ராமர் கோயில் கட்டும் இடத்திலா? மசூதி இருந்த இடத்தில் என்றால், ஏன் கோயிலை வேறெங்கோ 3 கிலோமீட்டர் pic.twitter.com/SVmdp51u23
— MK (@MaheenSylvan) January 17, 2024
இந்நிலையில் பாபர் மசூதி இடித்த இடம் வேறு ராமர் கோயில் கட்டுகின்ற இடம் வேறு எனக் கூகுள் மேப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. அப்பதிவுகளில் “பாபர் மசூதியை இடித்த இடமும் ராமர் கோயில் கட்டும் இடமும் வேறு வேறு.. இஸ்லாமிய சகோதரர்களுக்கு இதை விட பெரிய துரோகம் என்ன இருக்க முடியும்? ராமர் எங்கே பிறந்தார்? மசூதி இருந்த இடத்திலா? ராமர் கோயில் கட்டும் இடத்திலா? மசூதி இருந்த இடத்தில் என்றால், ஏன் கோயிலை வேறெங்கோ 3 கிலோமீட்டர் தொலைவில் கட்டினீர்கள்? இப்போது கோயில் கட்டி இருக்கும் இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்றால், சம்பந்தம் இல்லாமல் ஒரு 500 வருடம் முன்பு கட்டிய புராதான சின்னத்தை எதற்காக உடைத்தீர்கள்? எப்போதோ அமைதியாக கோயில் கட்டி போயிருக்கலாமே? மேலும் பாபர் ராமர் பிறந்த இடத்தில் கட்டினார் என்பது பொய் தானே??” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook link
உண்மை என்ன?
பரப்பப்படும் படத்தில் பாபர் மசூதி என குறிப்பிடப்பட்டு இருக்கும் இடம் குறித்து கூகுள் மேப் மூலம் தேடியதில், அது சீதா ராமர் கோயில் என்பதை அறிய முடிந்தது. மேலும் அப்படத்தில் குறிப்பிடும் இரண்டு இடங்களுக்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 750 மீட்டர் மட்டுமே (0.75 Km).
Google Maps செயற்கைக்கோள் படத்தின் உதவியுடன் அவ்விடத்தையும், அங்கு எடுக்கப்பட்ட படங்களையும் பார்த்ததில் அது சீதா ராமர் கோயில் என்பதை உறுதி செய்ய முடிந்தது.

தற்போது ராமர் கோயில் கட்டும் இடத்தின் ஆயத்தொலைவையும் (Coordinates) பாபர் மசூதி இருந்த இடத்தின் ஆயத்தொலைவையும் ஒப்பிட முயற்சித்தோம். பாபர் மசூதியின் ஆயத்தொலைவை 11 ஆண்டுகளுக்கு முன்னர் ‘Wikimapia’ என்னும் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (26°47'43"N 82°11'39"E). இதை வைத்து Google Earth தளம் மூலம் தேடுகையில், மசூதி இருந்த அதே இடத்தில் தான் ராமர் கோயில் கட்டிக் கொண்டுள்ளனர்.

இவற்றில் இருந்து பாபர் மசூதி இருந்த இடம் வேறு, ராமர் கோயில் கட்டப்படுகிற இடம் வேறு என பரப்பப்படும் தகவல் உண்மை அல்ல என்பதை அறிய முடிகிறது. மேலும் பரவும் கூகுள் மேப் படத்தில் சீதா ராமர் கோயிலை பாபர் மசூதி எனத் தவறாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் படிக்க : 1530ம் ஆண்டே இறந்த பாபர், 1556ல் ராமர் கோவிலை இடித்து மசூதி கட்டியதாக வீடியோவைப் பதிவிட்ட பாஜக !
ராமர் கோயில் திறப்பையொட்டி பல்வேறு போலி செய்திகள் பரப்பப்படுகிறது. அவை குறித்த உண்மைகளும் யூடர்ன் தளத்தில் கட்டுரைகளாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : எம்பி கனிமொழி அயோத்தி ராமர் கோவிலுக்கு 613 கிலோ மணியை அனுப்பியதாக ஜீ நியூஸ் வெளியிட்ட பொய் செய்தி!
முடிவு:
பாபர் மசூதியை இடித்த இடத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் ராமர் கோயில் கட்டுவதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. மசூதி இடித்த இடத்தில்தான் ராமர் கோயில் கட்டப்படுகிறது.
