YouTurn

ராமர் கோவில் கட்டும் பகுதியில் புத்தர் சிலை கிடைத்ததாக வதந்தி !

ராமர் கோவில் கட்டும் பகுதியில் புத்தர் சிலை கிடைத்ததாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பணிகள் நடைபெறும் போது நிலத்தில் புத்தர் சிலர் கிடைத்துள்ளதாக இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. Mohamed Irshath எனும் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட இப்புகைப்படம் பிற முகநூல் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது. உண்மை என்ன ? அயோத்தியில் ராமர் கோவில் கட்ட...

பரவிய செய்தி

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தோண்டிய போது ராமர் பிறந்த இடத்தில் அங்கு புத்தர் சிலைகள் கிடைத்தது.என்னடா இது ராமருக்கு வந்த சோதனை.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பணிகள் நடைபெறும் போது நிலத்தில் புத்தர் சிலர் கிடைத்துள்ளதாக இப்புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. Mohamed Irshath எனும் முகநூல் பக்கத்தில் பதிவிட்ட இப்புகைப்படம் பிற முகநூல் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.



உண்மை என்ன ? 

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தோண்டிய போது புத்தர் சிலைகள் கிடைத்ததாக பகிரப்பட்ட புகைப்படத்தில் 3 சிலைகளை காண முடிந்தது. அதில், ஒரு சிலையின் தலை பகுதியில் நாக வடிவம் இருப்பதை காணலாம். இது சமண மதத்தைச் சேர்ந்த துறவிகளின் சிலைகளில் இருப்பது போல் அமைந்து இருக்கிறது. எனினும், அது புத்தர் சிலையா அல்லது சமண துறவி சிலையா என உறுதிப்படுத்த முடியவில்லை.

பகிரப்பட்ட சிலைகளின் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில் 2019, 2018, 2017 வரையிலான ஆண்டுகளில் முகநூலில் இப்புகைப்படம் பதிவாகி இருப்பதை அறிய முடிந்தது. சில பதிவுகளில் புத்தரின் சிலை என பிற மொழியில் குறிப்பிட்டு உள்ளார்கள்.



Facebook link | archive link 



Facebook link | archive link

2015-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி vidrohi எனும் ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் கிடைத்த புத்த சிலை என இப்புகைப்படம் இடம்பெற்று உள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன்பே இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது என்பதை அறிய முடிகிறது.



Twitter link | archive link 

கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக  சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் சிலைகளின் புகைப்படங்களை எடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தோண்டிய பொழுது கிடைத்த புத்தர் சிலைகள் என வதந்தியை பரப்பி வருகிறார்கள். பரப்பப்படும் புகைப்படத்தில் இருக்கும் சிலைகள் எங்கு எடுக்கப்பட்டது என்கிற விவரங்கள் கிடைக்கவில்லை.

மேலும் படிக்க : அயோத்தியில் கிடைத்த 5 அடி சிவலிங்கத்தின் புகைப்படமா ?

இதற்கு முன்பாக, ராமர் கோவில் கட்டும் பணிகள் துவங்கிய பொழுது கிடைத்த 5 அடி உயர சிவலிங்கம் என வேறொரு கோவிலில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து வதந்தி பரப்பி இருந்தனர் என்பது கூடுதல் தகவல்.

ராமர் கோவில் கட்டுவதற்காக நிலத்தை சமன் செய்யும் போது இந்து மத அடையாளங்கள், தூண்கள், கடவுள்களின் சிலைகள், சிவலிங்கம் கிடைத்துள்ளதாக ராமர் கோவில் அறக்கட்டளை செய்திகளுக்கு தெரிவித்தது. இது தொடர்பாக சில புகைப்படங்களும் வெளியாகின.



ஆனால், ராம்ஜென்மபூமியில் கிடைத்த பண்டைய கலைப் பொருட்கள் அப்பகுதி புத்த ஸ்தலம் என நிரூபிப்பதாக கூறி காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் மீட்கப்பட்ட பொருட்களை இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் ஆய்வு செய்யக் கூறியதாக மே 22-ம் தேதி ஹிந்துதான் டைம்ஸ் செய்தியில் வெளியாகி இருக்கிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க