YouTurn

அயோத்தியில் பூமி பூஜைக்காக கூடிய சாமியார்கள் கூட்டம் என வதந்தி !

அயோத்தியில் பூமி பூஜைக்காக கூடிய சாமியார்கள் கூட்டம் என வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நேற்று அயோத்தியில் ராமர் கோயில் பூஜைக்காக குண்டியில் மாஸ்க் அணிந்து வந்த சாமிகள் கூட்டம், அரசின் ஆணைகேற்ப கோவிட் 19 சமூகஇடைவெளி கடைபிடிக்க தவறிய வானரங்கள் கூட்டம், 21ஆம் நூற்றாண்டில் இப்படியும் ஒரு பகுத்தறிவற்ற கூட்டம். பாசிச பிடியில் இந்தியாவின் மானம் கப்பலேறுகிறது.



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜைக்கு கூடிய சாமியார்களின் கூட்டம் என மேற்காணும் புகைப்படம் சமூக வலைதளங்களில் மத வெறுப்புணர்வு மற்றும் அரசியல் கருத்துக்களுடன் வைரலாகிக் கொண்டிருக்கிறது.



உண்மை என்ன ?  

அயோத்தியில் ஆகஸ்ட் 5-ம் தேதி ராமர் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை நிகழ்ந்த போது கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மக்கள் கூட்டம் கூடியதாக தொடர்ந்து வீண் வதந்திகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன. பழைய வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வதந்திகளை பரப்பி இருந்தனர்.

மேற்காணும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2013-ம் ஆண்டு அலகாபாத் பகுதியில் நடைபெற்ற கும்ப மேளா திருவிழாவின் போது ஜெர்மனியைச் சேர்ந்த ட்ராவல் ஃபோட்டோகிராஃபர் பெர்கர் என்பவர் எடுத்த புகைப்படம் என தெரிந்து கொள்ள முடிந்தது. 121 Clicks எனும் தளத்திற்கு அளித்த பேட்டியில் " சாதுக்கள் " அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை எடுத்தது குறித்தும் பேசி உள்ளார்.



மேலும் படிக்க : அயோத்தியில் கூடிய கூட்டம் என வைரலாகும் பழைய வீடியோ, புகைப்படங்கள் !

இதற்கு முன்பாகவும், பழைய வீடியோக்கள், புகைப்படங்களை எடுத்து அயோத்தியில் பூமி பூஜைக்கு கூடிய கூட்டம் என வதந்திகளை பரப்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க