YouTurn

குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர் சிலை என பரவும் போலியான புகைப்படம்!

குளத்தில் வைக்கப்பட்ட அத்திவரதர் சிலை என பரவும் போலியான புகைப்படம்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதரின் சிலை எடுக்கப்பட்டு 48 நாட்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் வந்த லட்சக்கணக்கான பக்தர்களால் கோவில் பகுதி தினந்தோறும் திருவிழா போன்று காட்சி...

பரவிய செய்தி

கோவில் குளத்தில் அத்திவரதரை வைத்த பிறகு நீர் நிரப்புவதற்கு முன்பு, நீர் நிரம்பிய பிறகு காட்சியளிக்கும் அத்திவரதர்.

விரிவான விளக்கம்

காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதரின் சிலை எடுக்கப்பட்டு 48 நாட்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் வந்த லட்சக்கணக்கான பக்தர்களால் கோவில் பகுதி தினந்தோறும் திருவிழா போன்று காட்சி அளித்தது.

இந்நிலையில், அத்திவரதரின் வைபவம் முடிவடைந்த இறுதி நாளான ஆகஸ்ட் 17-ம் தேதி சிலையானது மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது. அத்திவரதர் சிலை குளத்தில் வைக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் குளத்தில் நீர் நிரம்பிய பிறகு எடுக்கப்பட்ட புகைப்படம் என இரு புகைப்படங்கள் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



அத்திவரதர் சிலை குளத்தில் இருக்கும் காட்சி என பகிரப்படும் பதிவுகளில் இருக்கும் புகைப்படங்கள் பார்ப்பதற்கு ஃபோட்டோஷாப் மூலம் உருவாக்கப்பட்டது போன்று இருப்பதை கவனிக்க முடிந்தது. அந்த பதிவுகளில் உள்ள கமெண்ட்களில் தவறான புகைப்படங்கள், தவறான தகவல் என பதிவிட்டு வருகின்றனர்.

எனினும், குளத்தில் இருக்கும் அத்திவரதர் புகைப்படம் எனும் பதிவுகள் ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் ஷேர்களை பெற்று பலரையும் நம்ப வைத்து உள்ளது. பக்தியில் இருக்கும் மக்கள் உண்மை என நினைத்து பகிரவே செய்கின்றனர்.



அத்திவரதர் தரிசனத்தின் இறுதி நாளில் நள்ளிரவில் தான் சிலை குளத்தில் வைக்கப்பட்டது என செய்திகளில் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி, இரவில் குளத்தில் உள்ள பகுதியில் சிலை வைக்கப்படும் காட்சியை வீடியோவில் காணலாம். சிலையை சுற்றி நாகம் பொறிக்கப்பட்ட கற்கள் வைக்கப்பட்டுள்ளன.



அத்திவரதர் சிலையை சாதாரண ஃபோட்டோஷாப் மூலம் குளத்தில் இருப்பது போன்று உருவாக்கி உள்ளனர். சிலையின் அளவும் சிறிதாக இருப்பதை கவனிக்கலாம். பார்ப்பவர்கள் பலருக்கும் ஃபோட்டோஷாப் பதிவு என எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

இருப்பினும், இந்த புகைப்படத்தை உண்மை என நினைக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருக்கின்றனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களை முட்டாளாக்க வேண்டாம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…