YouTurn

50 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் அத்திப் பூ எனப் பரவும் பூஞ்சையின் புகைப்படம் !

50 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் அத்திப் பூ எனப் பரவும் பூஞ்சையின் புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மிகவும் அபூர்வமான விஷயங்களைப் பற்றி நாம் பேசும் போது *அத்திப் பூத்தாற் போல* என்று சொல்வது வழக்கம் தானே அந்த அத்தி மர பூ தான் கீழே இருப்பது 50 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். ஒருவர் தன் வாழ்நாளில் ஒரேயொரு முறைதான் இப்பூவை பார்க்கும் பாக்கியம் கிடைக்கும். 

Facebook link

விரிவான விளக்கம்

50 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அத்திப் பூ என மரத்தின் பகுதியில் பூவின் வடிவில் ஓட்டி இருக்கும் ஓர் புகைப்படத்தை கண்டு மகிழுங்கள் எனக் கூறி சமூக வலைதளங்களில் சில ஆண்டுகளாகவே பகிர்ந்து வருகிறார்கள்.





Twitter link | Archive link 

உண்மை என்ன ?

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2016-ல் lokmat எனும் மராத்தி இணையதளத்தில் இதே புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியாகி இருந்தது.



அதில், மகாராஷ்டிரா மாநிலத்தின் மிராஜ் கோட்டை தத்தா கோவில் அருகே சுனில் என்பவரது வீட்டில் உள்ள அம்பர் மரத்தில் அதிசயமாக மஞ்சள் நிறப்பூவை கண்ட பிறகு அதிசயம் நிகழ்ந்ததாக மக்கள் கூட்டம் கூடியது. அந்த மரத்தின் அருகே பெண் ஒருவர் வழிபாடு செய்ய துவங்க பலரும் பூஜை செய்து இருக்கிறார்கள்.

இதை அறிந்து அங்கு வந்த மூடநம்பிக்கை எதிர்ப்பு குழுவின் டாக்டர் பிரதீப் பாட்டீல் உள்ளிட்ட ஆர்வலர்கள், "அது அம்பர் மரத்தின் பூ அல்ல, பூ வடிவில் ஒருவகையான பூஞ்சை " எனக் கூறி இருக்கிறார்கள். இதுகுறித்து, காவல்துறையிடம் புகார் தெரிவித்ததாகவும் " கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பகோடா மலரா ?| ஃபேஸ்புக் வதந்தி.

இதற்கு முன்பாக, பல நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய பூக்கள் என பல்வேறு தவறான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன.

மேலும் படிக்க : இமயமலையில் 99 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிவலிங்க பூவா ?| உண்மை என்ன ?

முடிவு : 

நம் தேடலில், 50 வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அத்திப் பூ என பரப்பப்படும் புகைப்படத்தில் இருப்பது பூவே அல்ல, அது பூ வடிவிலான பூஞ்சை என்றும், இதை 2016-ல் மகாராஷ்டிராவில் அதிசய பூ என பரபரப்பை ஏற்படுத்தியது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க