YouTurn

திராவிட மாடல் ஆட்சியில் அடகு வைக்கப்படும் போக்குவரத்து கழக சொத்துகள்! உண்மை என்ன?

திராவிட மாடல் ஆட்சியில் அடகு வைக்கப்படும் போக்குவரத்து கழக சொத்துகள்! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது 2017ஆம் ஆண்டு வெளியான பழைய செய்தி. மேலும் போக்குவரத்து கழக சொத்துகள் அடமானம் வைக்கப்படுவது கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள விஷயமாகும்.

பரவிய செய்தி

இது என்னடா புது கதையா இருக்கு...

*அவசரத்துக்கு நகை அடகு வைப்போம்* 

*திராவிட மாடல்  அரசு பஸ்யே அடமானம் வச்சுட்டாங்க



X Link

விரிவான விளக்கம்

போக்குவரத்துக் கழகங்கள் அடமானத்தில் இயங்கி வருவதைப் பற்றி ’புதிய தலைமுறை’ செய்தித் தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக் காணொளியைப் பதிவிட்டு திமுக தலைமையிலான ’திராவிட மாடல்’ அரசு, போக்குவரத்துக் கழகங்களின் சொத்துகளை அடமானம் வைப்பதாக பாஜகவைச் சேர்ந்தவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பரப்புகிறார்.

 

https://x.com/i/web/status/1853053809649414452

உண்மை என்ன?


இது தொடர்பாக புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சியின் தளத்தில் 11 நிமிடம் நீண்ட செய்தி வீடியோ ஒன்று காணக்கிடைத்தது. இந்த வீடியோ அந்த தளத்தில் 'Unlisted' செய்யப்பட்டுள்ளது. இதனால், ஏற்கனவே இந்த வீடியோ எடுத்து வைத்திருப்பவர்களால் மட்டுமே காணமுடியும். இந்த செய்தி வீடியோ 2017ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி பதிவேற்றப்பட்டிருப்பதாக வீடியோவின் ’Description’ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 



இந்த செய்தியின்படி, “தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்கள் ஏன் நஷ்டத்தில் இயங்குகிறது என்பதைத் தெரிந்துகொள்ள மதுரை கீழவெளி வீதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்தார். அதன் மூலம் கிடைத்த தகவல்களின் படி, தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் பணிமனைகளும் அதன் சொத்துக்களும் வங்கிகளிடமும் அரசிடமும் அடமானத்தில் இருப்பதாகத் தெரியவந்திருக்கிறது” என்று குறிப்பிடப்படுகிறது. 


பரப்பப்படும் வீடியோவில் காட்டப்பட்டுள்ள ’Metropolitan Transport Corporation (Chennai)’ என்று தலைப்பிடப்பட்டுள்ள ஆவணத்தில் கூட ”17/10/2017” என்ற தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும், இதுபற்றிய விகடன் தளத்தில் 20/05/2017 அன்று ”அடமானத்தில் போக்குவரத்துக் கழகங்கள். அவமானத்தில் தமிழக அரசு!” என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியுள்ளது. அன்றைய காலத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மதுரை போக்குவரத்துக் கழகம், ’அதன் சொத்துக்களை அடமானம் வைப்பது 1974 ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது’ என்று தெரிவித்தது.


இதிலிருந்து, இந்த செய்தி 2017ஆம் ஆண்டு வெளியான ஒன்று என்பதும், போக்குவரத்துக் கழகங்களின் சொத்துகள் அடமானம் வைக்கப்படுவது கடந்த 50 ஆண்டுகளாக நடந்துவருகிறது என்பதும் தெளிவாகிறது. ஆனால், பாஜகவினர் இந்த பிரச்சனையை தற்போது நடந்ததுபோல செய்தியைத் திரித்துப் பரப்புகின்றனர்.


முடிவு:


இது 2017ஆம் ஆண்டு வெளியான பழைய செய்தி. இது தற்போதுதான் நடந்ததுபோல திரித்துப் பரப்பப்படுகிறது

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.