YouTurn

NRC-யில் பெயரில்லை என அசாம் மக்கள் வெளியேற்றப்படும் காட்சி உண்மையா ?

NRC-யில் பெயரில்லை என அசாம் மக்கள் வெளியேற்றப்படும் காட்சி உண்மையா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

மத்திய அரசு தேடிய குடிமக்கள் பதிவு(NRC)-ஐ அசாம் மாநிலத்தில் கொண்டு வந்த பிறகு, குடிமக்கள் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களின் சொந்த வீடுகளில் இருந்தே வலுக்கட்டாயமாக போலீசால் அகற்றப்பட்டு வருவதாக வீடியோ காட்சி ஒன்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை...

பரவிய செய்தி

அஸ்ஸாமில் NRC-யில் பேர் இல்லாதவர்களை சொந்த வீட்டிலிருந்து அடித்து விரட்டும் கோர காட்சி. மோடி சொல்வது யாருக்கும் NRC-யால் ஒரு பிரச்னையும் இல்லை. பரப்புங்கள் இந்த நாட்டின் வருங்கால நிலையை.



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

மத்திய அரசு தேடிய குடிமக்கள் பதிவு(NRC)-ஐ அசாம் மாநிலத்தில் கொண்டு வந்த பிறகு, குடிமக்கள் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களின் சொந்த வீடுகளில் இருந்தே வலுக்கட்டாயமாக போலீசால் அகற்றப்பட்டு வருவதாக வீடியோ காட்சி ஒன்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு வருகிறது.



இந்த வீடியோ தேசிய அளவில் குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு ஆகியவற்றிக்காக பகிரப்பட்டு வருகிறது. இதே வீடியோ இந்திய அளவில் ஆயிரக்கணக்கில் ஷேர்களையும், லட்சங்களில் பார்வைகளையும் பெற்று இருக்கிறது.

உண்மை என்ன ?

அசாம் மாநிலத்தில் மக்கள் அகற்றப்படுவதாக பரவும் வீடியோ குறித்து தேடிய பொழுது, 2019 மே 2-ம் தேதி இதே காட்சிகள் அடங்கிய வீடியோ யூடியூப் தளத்தில் பதிவாகி இருக்கிறது. அதில், பாஜக அரசு அசாம் மக்களை துன்புறுத்துவதாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.



Youtube link | archived link

இந்த இரண்டு வீடியோவிலும், ஒரே மாதிரியாக DY365 என்ற லோகோ இடம்பெற்று இருக்கிறது. அதை வைத்து தேடி பார்த்த பொழுது, அசாம் செய்தி சேனல் DY365 உடைய முகநூல் பக்கத்தில் 2 ஆண்களுக்கு முன்பே வைரலாகும் வீடியோவின் முழு வீடியோ வெளியாகி இருக்கிறது.



Facebook link | archived link 

அசாம் மாநிலத்தில் உள்ள அம்சாங் வனவிலங்கு சரணாலயப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் இரண்டாம் நாளில் கங்கன் நகரில் பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதில், போராட்டக்காரர்  இஸ்மாயில் ஹக் என அடையாளம் காணப்பட்டு, பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக அவரை தாக்கும் காட்சிகள் தெளிவாய் இடம்பெற்று உள்ளதாக முகநூலில் DY365 குறிப்பிட்டு உள்ளது. வீடியோவின் இறுதியில் சிறுவன் பேசும் காட்சியும் இடம்பெற்று உள்ளது.



நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் அம்சாங் வனப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் முயற்சிகள் தொடங்கியதாகவும், 200 ஹெக்டர் நிலத்தில் 283 வீடுகள் பிரிக்கப்பட்டதால் 2000 மக்கள் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு உள்ளனர். இதில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2017-ம் ஆண்டு அசாம் வனப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் பணியின் போது போராட்டக்காரரை தாக்கியதாக வெளியான வீடியோவை 2019 டிசம்பரில் தேசிய குடிமக்கள் பதிவு அமல்படுத்திய பிறகு பட்டியலில் பெயர் இல்லை என போலீஸ் மக்களை வீடுகளில் இருந்து விரட்டி அடிப்பதாக தவறாக பரப்பி வருகின்றனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.