YouTurn

தெலுங்கர் விஷால் வெற்றி பெறும் போது நான் கூடாதா என பிரகாஷ் ராஜ் கூறினாரா ?

தெலுங்கர் விஷால் வெற்றி பெறும் போது நான் கூடாதா என பிரகாஷ் ராஜ் கூறினாரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

"தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெறும் போது நான் கூடாதா?" - சீறும் பிரகாஷ்ராஜ்



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடைபெறும் தேர்தலில் பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில், பிரகாஷ் ராஜ் கன்னடர் என்றும், அவர் தெலுங்கு நடிகர்கள் சங்கத் தேர்தலில் எப்படி போட்டியிட முடியும் என எழுந்த கேள்விக்கு, " தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெறும் போது நான் கூடாதா " எனக் கருத்தைக் கூறியதாக கதிர் நியூஸ் ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 27-ம் தேதி நியூஸ் கார்டு மற்றும் இணையதளத்தில் செய்தியும் வெளியாகி இருக்கிறது.



ஜூன் 26-ம் தேதி தினமலரின் சினிமா பிரிவில் வெளியான செய்தியில், " தெலுங்கு பேசும் விஷால் தமிழ்நாட்டில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கிறார் என்கிறபோது நான் ஏன் இங்கு போட்டியிடக் கூடாது ?" என பிரகாஷ் கூறியதாக வெளியாகி இருக்கிறது.

உண்மை என்ன ?

தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நடக்கும் தேர்தலில் பிரகாஷ் ராஜ் போட்டியிடுவது தொடர்பாகவும், அவர் போட்டியிடுவதில் இனப் பிரச்சனையை தூண்டி விட்டுள்ளதாகவும், அதற்கு பிரகாஷ் ராஜ் பதில் அளித்து உள்ளது குறித்தும் தமிழ் செய்திகள் சிலவற்றில் வெளியாகி இருக்கிறது.

ஜூன் 26-ம் தேதி வெளியான நியூஸ் 18 தமிழ் செய்தியில், " கலைஞர்களை மொழியை வைத்து பிரிப்பது சரியில்லை என காட்டமாக பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார் " என வெளியாகி இருக்கிறது. ஜூன் 28-ம் தேதி பிரகாஷ் ராஜ் குறித்து வெளியான தினத்தந்தி செய்தியிலும் கூட அவ்வாறான செய்தியே வெளியாகி இருக்கிறது. விஷால் குறித்து பேசியதாக எந்த தகவலும் செய்திகளில் இடம்பெறவில்லை.

கதிர் நியூஸ் இணையதளத்தில் பிரகாஷ் ராஜ் அணியினர் பேசுவது போன்ற புகைப்படம் இடம்பெற்று இருந்தது. அந்த பேட்டி குறித்து தேடுகையில், தன்னை பற்றி எழும் கமெண்ட்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பிரகாஷ் ராஜ் அணியினர் அளித்த பேட்டி ஜூன் 25-ம் தேதி Filmy Focus எனும் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது.



தெலுங்கு மொழி தெரிந்தவரை அணுகி மேற்காணும் 12 நிமிட வீடியோவில் பேசியதை மொழி மாற்றம் செய்து கேட்கையில், அந்த வீடியோவில் எந்த இடத்திலும் விஷால் குறித்தோ, தமிழ்நாடு குறித்தோ பேசவில்லை. கலைஞர்களுக்கு மொழி பாகுபாடு இல்லை, தாம் வந்தால் சிறப்பாக செயல்படுவேன் என்ற ரீதியில் பேசி உள்ளார் " எனத் தெரிவித்து இருந்தார்.

இதை மேலும் உறுதி செய்து கொள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களை யூடர்ன் தரப்பில் தொடர்பு கொண்டு பேசுகையில், " யார் யாரோ கண்டபடி எழுதுகிறார்கள். நான் அப்படி சொல்லவே இல்லை " எனப் பதில் அளித்து இருந்தார்.

மேலும் படிக்க : கர்நாடகாவை கன்னடர்களே ஆள வேண்டுமா! பிரகாஷ் ராஜ் முழு விளக்கம்

முடிவு :

நம் தேடலில், தெலுங்கரான விஷால் தமிழ் நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெறும் போது நான் இங்கு போட்டியிட்டு வெற்றி பெறக் கூடாதா என பிரகாஷ் ராஜ் பேசியதாக பரவும் செய்தி பொய்யானது. அவர் அப்படி பேசவில்லை என மறுத்து இருக்கிறார் என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க