YouTurn

படத்தில் இருப்பது அர்னால்ட் மகனா ?

படத்தில் இருப்பது அர்னால்ட் மகனா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

calum von moger ஆஸ்திரேலியாவை சேர்ந்த 28 வயதான body builder ஆவார். ஸ்டீவ் லீ ஜோன்ஸ் என்பவர் இயக்கும் " Bigger " என்ற திரைப்படத்தில் அர்னால்ட் ஆக நடிக்கிறார். 2018-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட bigger படத்தில் அர்னால்ட் ஹாலிவுட் சினிமாவில் நுழைவதற்கு முன்பாக அவரின் இளமை கால body builder பகுதியே...

பரவிய செய்தி

அப்பாவிற்கு பிள்ளை தப்பாமல் பிறந்து இருக்கு. அர்னால்ட் மற்றும் அவர் மகனின் புகைப்படம்

விரிவான விளக்கம்

calum von moger ஆஸ்திரேலியாவை சேர்ந்த 28 வயதான body builder ஆவார். ஸ்டீவ் லீ ஜோன்ஸ் என்பவர் இயக்கும் "  Bigger " என்ற திரைப்படத்தில் அர்னால்ட் ஆக நடிக்கிறார்.



2018-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட bigger படத்தில் அர்னால்ட் ஹாலிவுட் சினிமாவில் நுழைவதற்கு முன்பாக அவரின் இளமை கால body builder பகுதியே கதைக் கரு. இதில், நடிப்பது பெருமையாக இருப்பதாக calum von moger கூறியுள்ளார்.



calum von mogerக்கு அர்னால்ட் பயிற்சி வழங்குவது போன்ற புகைப்படங்கள் ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன.

2017 ஜூலை 31-ம் தேதி calum von moger அர்னால்ட் உடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அர்னால்ட்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து இருந்தார். அப்படங்களே தற்போது தவறான தகவலுடன் பதிவிடப்படுகிறது.



2017 அக்டோபர் 19-ம் தேதி இன்ஸ்டாகிராமில், " ஒரு நாள் நான் அர்னால்ட் கதாப்பாத்திரத்தில் நடிப்பேன் என சில ஆண்டுகளுக்கு முன்பு பலரும் கூறினார்கள். அது தற்போது நடந்துள்ளது. Bigger என்ற திரைப்படத்தில் schwarzenegger கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளேன் " என பதிவிட்டு இருந்தார்.

அர்னால்ட் கதாப்பாத்திரத்தில் நடிப்பவரை உருவ ஒற்றுமை சிறிது இருப்பதால் மகன் என்று பலரும் கருத்து கூறினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  எனினும், அர்னால்ட் மற்றும் calum von moger-க்கும் எந்த உறவு முறையும் இல்லை.

சுருக்கமாக

படத்தில் இருப்பவர் அர்னால்ட் தோற்றத்தில் இருப்பதால் அவரின் மகன் என பலரும் நினைத்து விட்டனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.