YouTurn

ஹோட்டலில் இடம் தராததால் தன் சிலைக்கு முன்பாக அர்னால்ட் உறங்கியதாக பரவும் வதந்தி !

ஹோட்டலில் இடம் தராததால் தன் சிலைக்கு முன்பாக அர்னால்ட் உறங்கியதாக பரவும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


எதுவும் நிரந்தரம் கிடையாது அர்னால்டின் வாழ்க்கை உதாரணம். தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை.



விரிவான விளக்கம்

உலகப் புகழ்பெற்ற பாடிபில்டர், ஹாலிவுட் நடிகர், கலிபோர்னியாவின் முன்னாள் கவர்னரான அர்னால்டுக்கு நேர்ந்த பரிதாப நிலை என மேற்காணும் புகைப்படத்துடன் ஓர் கதை நீண்டகாலமாகவே சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது.

" புகழின் உச்சியில் இருக்கும் போது தன்னுடைய வெண்கல சிலை நிறுவப்பட்ட ஓர் ஆடம்பர ஹோட்டலை அர்னால்ட் திறந்து வைத்தார். ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு " எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும் என்று அறிவித்தார். நாட்கள் நகர்ந்து, பதவி மற்றும் புகழ் இல்லாமல் அதே ஹோட்டலுக்கு சென்ற போது அறை ஏதும் இல்லை என நிர்வாகம் கூறியதால் தன் சிலைக்கு முன்பாகவே படுத்து உறங்கி விட்டார். இதை தன்னுடைய சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்து உள்ளார் " என உலக அளவில் பரப்பப்பட்டது. வாழ்வில் எதுவும் நிரந்தரமில்லை எனக் கூறி தற்போதும் இப்புகைப்படம் தொடர்ந்து உலாவி வருகிறது.



Facebook link | archive link  



உண்மை என்ன ? 

அர்னால்ட் புகைப்படத்துடன், தன்னால் திறக்கப்பட்ட ஆடம்பர விடுதியில் அறை வழங்கப்படவில்லை என்பதால் தன்னுடைய சிலைக்கு முன்பாக உறங்கியதாக பரவும் கதை பொய்யானது மற்றும் சித்தரிக்கப்பட்ட ஒன்றாகும். உண்மையில் இப்புகைப்படம், 2016-ம் ஆண்டில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள கொலம்பஸ் எனும் பகுதியில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் படப்பிடிப்பிற்காக வந்த போது எடுக்கப்பட்டது.

Instagram archive link 

2016 ஜனவரி 15-ம் தேதி அர்னால்ட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இப்புகைப்படத்தை பகிர்ந்து " How Times Have changed " என நையாண்டித்தனமாகப் பதிவிட்டு இருக்கிறார்.  புகைப்படத்தில் இருக்கும் அர்னால்ட்  சிலையானது " Franklin Country Veterans Memorial " எனும் இடத்தில் 2012-ல் அமைக்கப்பட்டது. பின்னர் 2014-ல் கொலம்பஸ் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அப்பகுதியில் ஆண்டுதோறும் " Arnold Sports Festival " எனும் பெயரில் பாடி பில்டிங் போட்டியானது நடத்தப்பட்டு வருகிறது.



சமூக வலைதளத்தில் கூறியது போன்று அர்னால்ட் சிலை நிறுவப்பட்டது ஆடம்பர விடுதிக்கு முன்பாக அல்ல. 2016-ல் கொலம்பஸ் பகுதியில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தன் சிலைக்கு முன்பாக படுத்துக் கொண்டிருப்பது போன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை " காலம் எப்படி மாறுகிறது " என கிண்டலாக தன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பதிவிட்டு இருக்கிறார். ஆனால், அந்த புகைப்படத்தை வைத்து, அவர் திறந்து வைத்து ஹோட்டலிலேயே அறை வழங்காத காரணத்தினால் சாலையில் உறங்கினார் என வதந்தி கதையை இணைத்து தவறாக பரப்பி வந்துள்ளனர்.

முடிவு :

நம் தேடலில், தன்னுடைய வெண்கல சிலைக்கு முன்பாக உறங்கும் அர்னால்டின் பரிதாப நிலை எனக் கூறி பரப்பப்படும் கதை வதந்தியே என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க